வேட்டியை தூக்கி காட்டிய கருணாநிதி: திருச்சியில் தி.மு.க.வினர் அராஜகம்!

வேட்டியை தூக்கி காட்டிய கருணாநிதி: திருச்சியில் தி.மு.க.வினர் அராஜகம்!

Share it if you like it

தி.மு.க நிர்வாகி கருணாநிதி பொது இடத்தில் அநாகரீகமான முறையில் நடந்து கொண்ட சம்பவத்திற்கு பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

தி.மு.க தலைவர் ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தில் தற்பொழுது ஆட்சி நடைபெற்று வருகிறது. இவர், பதவியேற்ற பின்பு அக்கட்சியை சேர்ந்த தொண்டர்கள், நிர்வாகிகள், கழக முன்னோடிகள் மற்றும் கழகத்தின் கண்மணிகள் கட்டு அவிழ்த்த காளை போல பொதுமக்களுக்கு கொடுத்து வரும் தொல்லைகளை ஊடகங்கள் மற்றும் பத்திரிக்கைகள் வாயிலாக அறிந்து கொள்ள முடியும். அந்தவகையில், திருச்சி மாவட்டத்தில் தி.மு.க நிர்வாகி ஒருவர் பொது இடத்தில் ஒழுங்கீனமான முறையில் நடந்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அது குறித்தான செய்தியினை பிரபல இணையதள ஊடகமான தினமலர் வெளியிட்டுள்ளது.

திருச்சி மாவட்டம் பொன்நகர் வி.வி.வி தியேட்டர் அருகே பா.ஜ.க.வின் கொடி கம்பம் நடப்பட்டுள்ளது. இதனை, நேற்று இரவு மர்ம நபர்கள் அகற்றியுள்ளனர். பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் பிறந்த நாளை முன்னிட்டு கட்சியின் கொடி மரத்தை மீண்டும் அதே இடத்தில் பா.ஜ.க.வினர் நட்டுள்ளனர். இதையடுத்து, தி.மு.க பிரமுகர் கருணாநிதி கட்சி தொண்டர்களுடன் அங்கு வந்து கொடி மரத்தை இங்கு நட கூடாது என வாக்குவாதம் செய்துள்ளார். பதிலுக்கு பா.ஜ.க.வினரும் தங்களது கடும் எதிர்ப்பினை பதிவு செய்து உள்ளனர். இதனிடையே, கடும் கோவம் அடைந்த கருணாநிதி ஆபாச வார்த்தைகளால் பா.ஜ.க.வினரை திட்டியது மட்டுமில்லாமல், தனது வேட்டியை தூக்கி காட்டி ஒழுங்கீனமான முறையில் நடந்து கொண்டுள்ளார். தி.மு.க நிர்வாகியின் இந்த கீழ்த்தரமான செயலுக்கு பா.ஜ.க.வினர் தங்களது கடும் எதிர்ப்பினை தெரிவித்துள்ளனர்.

ஆபாசமாக நடந்து கொண்ட கருணாநிதி மீது ஸ்டாலின் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

https://www.facebook.com/Dinamalardaily/videos/744448116747863/


Share it if you like it