வி.சி.க.வை தொடர்ந்து காங்கிரஸ் விமர்சனம்!

வி.சி.க.வை தொடர்ந்து காங்கிரஸ் விமர்சனம்!

Share it if you like it

முதல்வர் ஸ்டாலின் வசம் உள்ள காவல் துறை குறித்து, தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்து இருக்கும் கருத்து பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழகத்தில், திராவிட முன்னேற்ற கழகத்தின் ஆட்சி நடைபெற்று வருகிறது. தமிழக முதல்வராக, ஸ்டாலின் பொறுப்பு ஏற்றுக் கொண்ட பின்பு பொதுமக்களின் பாதுகாப்பு என்பது பெரும் கேள்விக்குறியாக மாறி இருக்கிறது. தவிர, கழக கண்மணிகள் செய்யும் சேட்டைகள், அட்டூழியங்கள் தொடர்கதையாக இருந்து வருகிறது. குறிப்பாக, பெண் குழந்தைகளை பெற்றவர்கள் இந்த அரசின் மீது கடும் அதிருப்தியில் இருந்து வருகின்றனர். இப்படியாக, தி.மு.க. ஆட்சி தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. இது ஒருபுறம் இருக்க, தொடரும் லாக்கப் மரணங்கள் மறுபுறம் காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை இருந்து வருகின்றன.

தி.மு.க. கூட்டணியில் உள்ள வி.சி.க கட்சியின் மூத்த தலைவர் வன்னியரசு, விடுதலைச்சிறுத்தைகள் கொடி எங்கெங்கெங்கு ஏற்றப்படுகிறதோ, அதை கண்டறிந்து தடுப்பதற்கு தமிழ்நாடு காவல்துறையில் தனி அணி எதுவும் போடப்பட்டுள்ளதா? இதே வேலையாய் திரிகிறார்கள். விடுதலைச் சிறுத்தைகளின் பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு என முதல்வரின் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையை மிக கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார்.

இந்நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ். அழகிரி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்ளும் விதமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு அண்மையில் சென்று இருந்தார். இதையடுத்து, அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அந்த வகையில், அவர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். இதனிடையே, பள்ளி மாணவி ஸ்ரீமதி குறித்து எழுப்பபட்ட கேள்விக்கு அவர் கூறியததாவது; கள்ளக்குறிச்சி சம்பவத்தில் காவல்துறை அடைந்துள்ள தோல்வி ஒரு இமயமலை அளவிலானது. வன்முறையாளர்கள் பள்ளிக்கு உள்ளே புகுந்து பொருட்களை சூறையாடுகின்ற போது காவல்துறை பயந்து ஓடுகிறது. தமிழக முதல்-அமைச்சர் எவ்வளவு சிறப்பாக செயல்பட்டாலும் கூட மாவட்ட நிர்வாகத்தில் இருக்கின்றவர்கள் திறமையற்றவர்களாக இருக்கின்ற போது இது போன்ற இடையூறுகள் ஏற்படுகிறது என குறிப்பிட்டு இருக்கிறார்.

வி.சி.க. மூத்த தலைவர் வன்னியரசை தொடர்ந்து தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ். அழகிரி தமிழக முதல்வர் வசம் உள்ள காவல்துறையை விமர்சனம் செய்து இருப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


Share it if you like it