ஜனாதிபதி வேட்பாளர் தேர்தலில் தி.மு.க.வை சேர்ந்த ஒருவர் செல்லாத வாக்கு அளித்திருப்பது தமிழக மக்களிடையே பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தி இருக்கிறன.
காங்கிரஸ், தி.மு.க, திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் வி.சி.க. உள்ளிட்ட 17 கட்சிகள் ஒன்றிணைந்து களம் இறக்கிய ஜனாதிபதி வேட்பாளர் யஷ்வந்த் சின்கா. அதே வேளையில், பா.ஜ.க.வின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் திரௌபதி முர்மு. இவர், பழங்குடி இனத்தை சேர்ந்தவர். கடந்த 18. 07. 2022 அன்று ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து, அதன் முடிவுகள் 21. 07. 2022 நேற்றைய தினம் வெளியாகியது.
இதில், பா.ஜ.க. வேட்பாளர் சுமார் 64% சதவீத வாக்குகள் கிடைத்து அபார வெற்றி பெற்றார். மொத்தம் பதிவான வாக்குகள் 4, 754. அதில், செல்லாத வாக்குகள் 53. மீதமுள்ள 4,701 வாக்குகளில் திரௌபதிக்கு கிடைத்த வாக்குகள் சுமார் 2,824. அந்த வகையில், அதன் மொத்த மதிப்பு 6, 76, 803 ஆகும். அதேபோல, எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் யஷ்வந்த் சின்காவிற்கு கிடைத்தது வெறும் 36% சதவீத வாக்குகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, இந்தியாவை கடந்து உலகம் முழுவதும் பெரும், எதிர்ப்பை ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் ஏற்படுத்தி இருந்தன. அதன்படி, இதன் முடிவுகள் நேற்றைய தினம் வெளியாகியது. இதில், பா.ஜ.க. வேட்பாளர் திரெளபதி முர்மு அபாரமான வெற்றியினை பதிவு செய்து இருக்கிறார். இந்திய வரலாற்றிலேயே முதன் முறையாக, பழங்குடியினத்தை சேர்ந்த ஒரு பெண்மணி பாரத தேசத்தின் மிகப்பெரிய பதவியினை அலங்கரிக்க இருக்கிறார். இதற்கு, முழுக்க முழுக்க பாரதப் பிரதமர் மோடியே காரணம் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.
சமூக நீதி, சுயமரியாதை என்று ஊர் முழுக்க தம்பட்டம் அடிக்கும் கட்சியாக தி.மு.க மற்றும் அதன் கூட்டணிகள் இருந்து வருகின்றன. ஆனால், இவர்களில் ஒருவர் கூட பழங்குடியினத்தை, சேர்ந்த திரெளபதியை ஆதரிக்க முன்வரவில்லை என்பதே கசப்பான உண்மை. இந்நிலையில், தி.மு.க.வை சேர்ந்த ஒருவர் செல்லாத வாக்கு ஒன்றினை பதிவு செய்து இருப்பதாக தற்பொழுது தகவல் வெளியாகி இருக்கிறது. ஒரு வாக்கை, கூட சரியாக பதிவு செய்யாத அவர் எப்படி? மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வார் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆந்திரா, நாகாலாந்து மற்றும் சிக்கிம் உள்ளிட்ட மாநிலங்களில் தி.மு.க. ஆதரித்த வேட்பாளர் யஷ்வந்த் சின்காவிற்கு ஒரு ஓட்டு கூட பதிவு ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.