கட்சி மாறுபவர்களை விபச்சாரிக்கு சமம் என்று பிரபல இணையதள ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தி.மு.க.வின் மிக மூத்த தலைவர், பொதுச் செயலாளர் மற்றும் நீர்வளத்துறை அமைச்சாரக இருப்பவர் துரைமுருகன். இவர், நக்கல் நையாண்டியாக பேசுவதில் வல்லவர். அந்த வகையில், இவர் தெரிவிக்கும் கருத்துக்கள் கூட்டணி கட்சியையும் பதம் பார்த்து விடும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. அந்த வகையில், கடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக தொகுதிகள் கேட்ட போது, துரைமுருகன் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இப்படிப்பட்ட சூழலில், பிஹைன்ட் உட்ஸ் (பின்னாடி கட்டை) இணையதள சேனலுக்கு துரைமுருகன் பேட்டி அளித்து இருக்கிறார். அப்போது, அவர் பேசுகையில் கட்சி மாறுபவர்களை விபச்சாரிகளுக்கு சமம் என்று தெரிவித்து இருக்கிறார். துரைமுருகனின் இந்த கருத்து அ.தி.மு.க.வில் இருந்து தி.மு.க.விற்கு தாவி இருக்கும் 8 அமைச்சர்களையும் சுட்டி காட்டுவது போல அமைந்து இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் துரைமுருகனுக்கு இடையில் சமீப நாட்களாக கருத்து வேறுபாடு நிலவி வருவதாக சொல்லப்படுகிறது. இப்படிப்பட்ட சூழலில், அமைச்சர் தெரிவித்து இருக்கும் கருத்து பெரும் சர்ச்சையாக வெடித்து இருக்கிறது.