இலவசங்கள் வேண்டாம் என ஸ்டாலின் கூறி இருக்கிறார். இலவசங்களை வேண்டாம் என்று சொல்பவர்களை அடியுங்கள் என ஜெயரஞ்சன் கூறி இருக்கிறார். இருவரின், முரண்பட்ட கருத்துகள் பொதுமக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
பாரதப் பிரதமர் மோடி இலவசங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் தடையாக இருப்பதாக கூறியிருந்தார். இதற்கு, தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பிரதமர் மோடியின் கருத்தை திரித்து தொடர்ந்து அவதூறு பிரச்சாரங்களை தமிழகத்தில் மேற்கொண்டு வருகின்றனர். இப்படிப்பட்ட சூழலில், கடந்த சட்டமன்ற தேர்தலின் போது தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கூறியதாவது; இலவசங்கள் தேவையில்லை. மக்களும் அதனை விரும்பவில்லை. நாட்டின் முன்னேற்றம் தான் முக்கியம். எங்களின் வருமானத்தை பெருக்கி கொடுங்கள் நாங்கள் எல்லாவற்றையும் வாங்கி கொள்கிறோம் என்று மக்கள் சிந்திக்கும் காலம் வந்து விட்டது என்று கூறியிருந்தார்.
இப்படிப்பட்ட சூழலில் தான், மாநில வளர்ச்சி கொள்கைக் குழு துணைத் தலைவராக இருக்கும் ஜெயரஞ்சன், “இலவசம்” என்று யாராவது கூறினால் அவர்களை செருப்பை கொண்டு அடியுங்கள் என மிக கடுமையான பேசி இருக்கிறார். மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
தேர்தல் சமயத்தில் இலவசம் வேண்டாம் என்கிறார் தி.மு.க. தலைவர் ஸ்டாலின். ஆட்சிக்கு வந்த பின்பு இலவசம் வேண்டும் என ஜெயரஞ்சனை வைத்து பேச வைக்கிறாரா? என பொதுமக்கள் தற்போது தமிழக அரசை கேள்வி கேட்க துவங்கி இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தி.மு.க.வில் இருக்கும் முதலியார் சமூக மக்களும் பல துறையில் முன்னேறி முத்திரை பதிக்கும் பட்டியலின சமூக மக்களும் கீழே உள்ள கட்டுரையை கட்டாயம் படிக்க வேண்டும். கம்யூனிச ஆதரவாளர் ஜெயரஞ்சன் மற்றும் ஆனந்தி ராஜன் போன்றவர்கள் எவ்வாறு ஆய்வு என்ற பெயரில் தங்களது அசிங்கங்களை உமிழ்ந்திருக்கிறார்கள் என்று அதற்குறிய ஆதாரத்தினை ஊடக நெறியாளர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.



