சின்னவரை பின்னுக்கு தள்ளிய முன்னவர்!

சின்னவரை பின்னுக்கு தள்ளிய முன்னவர்!

Share it if you like it

தி.மு.க. மூத்த தலைவர் கே.என்.நேரு சொகுசு கார் ஒன்றினை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து இருப்பது அக்கட்சியினர் மத்தியில் மிகுந்த ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

தி.மு.க. முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சராக இருப்பவர் கே.என்.நேரு. இவர், அக்கட்சியின் செல்வாக்கு மிக்க தலைவராக இருந்து வருகிறார். இதுதவிர, தி.மு.க.விலேயே அதிக வைட்டமின் ‘ப’ கொண்டவர். அந்த வகையில், திருச்சி மாவட்டத்தில் இவர் வைப்பது தான் சட்டம், முதல்வரே இவரது கருத்தை மீறி செயல்பட மாட்டார் என்ற கருத்தும் இருந்து வருகிறது.

இப்படிப்பட்ட சூழலில் தான், இந்தியாவில் இன்னும் விற்பனைக்கு கூட வராத டொயோட்டா லேண்ட் க்ரூஸர் சொகுசு காரை அமைச்சர் கே.என். நேரு வாங்கி இருப்பதாக செய்தி வெளியாகி இருக்கிறது. இது குறித்தான மேலும், கூடுதல் விவரங்களுக்கு நியூஸ்18 செய்தி லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


Share it if you like it