பி.டி.ஆருக்கு குட்டு வைத்த தலைமை நீதிபதி!

பி.டி.ஆருக்கு குட்டு வைத்த தலைமை நீதிபதி!

Share it if you like it

தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு டெல்லி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா தனது கடும் கண்டனத்தை தெரிவித்து இருக்கிறார்.

தி.மு.க.வின் நிதியமைச்சராக இருப்பவர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன். இவர், தாம் மட்டுமே மெத்த படித்தவர் எனவும் மற்றவர்கள் படிக்காதவர்கள் என்ற ஆணவ போக்கினை கொண்டவர். அதனைமெய்ப்பிக்கும் வகையில், இன்று வரை இவரது பேச்சுக்கள் இருந்து வருகிறது. நான் யார் தெரியுமா? என் தாத்தா யார் தெரியுமா? எனது குடும்ப பின்னணி தெரியுமா? என்று தற்பெருமை பேசுவதை வழக்கமாக கொண்டவர்.

இப்படிப்பட்ட சூழலில், தேர்தல் சமயத்தில் கொடுக்கப்படும் இலவச வாக்குறுதிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என வழக்கறிஞர் அஷ்வினி உபாத்யாய் உச்சநீதிமன்றத்தில் அண்மையில் மனுத் தாக்கல் செய்து இருந்தார். இந்த வழக்கினை, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையில் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. இதனிடையே, தி.மு.க. எம்.பி.யும் வழக்கறிஞருமான, வில்சன் ரிட் மனுவை தாக்கல் செய்து எதிர்மனுதாரராக தம்மை சேர்த்துக் கொண்டது. இதனிடையே, இலவசங்களால் மக்களின் பொருளாதாரம் உயர்ந்துள்ளது என்று தி.மு.க தரப்பில் பல்வேறு வாதங்கள் முன்வைக்கப்பட்டு இருக்கின்றன.

இந்த நிலையில் தான், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தி.மு.க. எம்.பி.யிடம் தனது கடும் கண்டனத்தை இவ்வாறு பதிவு செய்து இருக்கிறார்;

தி.மு.க. மட்டும்தான் புத்திசாலித்தனமான கட்சி என்று நினைக்காதீர்கள். நீங்கள், பேசுவதையெல்லாம் பற்றி நாங்கள் எதுவும் சொல்லாததால், எங்களுக்குத் எதுவும் தெரியாது என்று நினைக்க வேண்டாம்- இலவசங்கள் தொடர்பான வழக்கில் நிதியமைச்சர் பி.டி.ஆரின் பேச்சை மேற்கோள் காட்டி நீதிபதி என்.வி.ரமணா தனது கடும் கண்டனத்தை தெரிவித்து இருக்கிறார்.


Share it if you like it