கோட்டை ஈஸ்வரன் கோவிலின் வரலாறு பற்றி தெரியாமல் அமைச்சர் செந்தில் பாலாஜி உளறி கொட்டி இருக்கும் சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
கோவை மாவட்டம், உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே கடந்த 9 நாட்களுக்கு முன்பு அதிகாலை கார் ஒன்று வெடித்து சிதறியது. இச்சம்பவம், தமிழகத்தையும் தாண்டி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. தமிழகத்தில், மிகப்பெரிய தாக்குதலை நடத்த தீவிரவாதிகள் நடத்திய திட்டமிட்ட செயலாக இது இருக்க கூடும் என ஆங்கில ஊடகங்கள் முதற்கொண்டு, பல்வேறு பத்திரிகைகளும் செய்திகளை வெளியிட்டு இருந்தன.
இதனிடையே, கோவை மக்களை மிகப்பெரிய ஆபத்தில் இருந்து காப்பாற்றிய கோட்டை ஈஸ்வரனை அவ்வூர் மக்கள் தொடர்ந்து வழிபட்டு வருகின்றனர். அந்த வகையில், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நேற்றை தினம் கோட்டை ஈஸ்வரன் கோவிலுக்கு சென்றார். அவருடன், பா.ஜ.க. தொண்டர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து, பொதுமக்களுடன் இணைந்து அவர் கந்த சஷ்டி கவசத்தை பாடினார்.
இந்த நிலையில், தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, அண்ணாமலை குறித்து நிருபர் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் கூறியதாவது ; “கோட்டை ஈஸ்வரன் கோயிலில் உட்கார்ந்து, கந்தசஷ்டி கவசம் படிச்சவங்கள இங்கதான் பார்த்திருப்பீங்க என்று கிண்டல் செய்யும் விதமாக கூறியிருக்கிறார்.
கோட்டை ஈஸ்வரன் கோவில் வரலாறு என்ன கூறுகிறது என்றால், சோமஸ்கந்தராக உள்ள முருகன் சூரபத்மனை வதம் செய்யும் கோலத்தில் காட்சி தருகிறார். வடக்கு நோக்கிய மயில் வாகனத்துடன் சண்முக சுப்பிரமணியர் என்ற பெயருடன் உள்ளார். இவரது, ஆறுமுகங்களும் நேரே நோக்கிய நிலையில், 12 கைகளிலும் ஆயுதங்களைத் தாங்கியபடி காட்சி தருவது சிறப்பு. கோயில் அமைப்புப்படி இவரே மூலவராக அருள்பாலிக்கும் தோற்றத்தில் உள்ளார் என்று சொல்கிறது.
உண்மை இவ்வாறு இருக்க, கோவில் வரலாறு பற்றி தெரியாமல் பத்திரிகையாளர்கள் முன்பு சாராய அமைச்சர் ஏன்? இப்படி உளறி கொட்டி வருகிறார். அவருக்கு, இன்னும் போதை தெளியவில்லையா என்று நெட்டிசன்கள் செந்தில் பாலாஜியை மிக கடுமையாக சாடி வருகின்றனர்.