காங்கிரஸ் வேட்பாளர் இ.வி.கே.எஸ். இளங்கோவன் வெற்றி பெற வேண்டி தி.மு.க. நிர்வாகி கனிமொழி பாத்திரம் கழுவி கொடுத்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் பிப் -27 அன்று இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. அந்த வகையில், காங்கிரஸ் சார்பில் இ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுகிறார். அதனை முன்னிட்டு, அ.தி.மு.க. கூட்டணி மற்றும் நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.
அந்த வகையில், எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் ஆளும் கட்சியான தி.மு.க. பல்வேறு தில்லு முல்லு சம்பவங்களை அரங்கேற்றி வருகிறது. மேலும், மக்களிடம் நற்பெயர் எடுக்கும் வகையில் பல்வேறு வாக்குறுதிகளை அள்ளி தெளித்து வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், தி.மு.க.வின் மூத்த தலைவரும், கோவை தெற்கு மாவட்ட தி.மு.க. துணைச் செயலாளராக இருப்பவர் கனிமொழி. இவர், அத்தொகுதி மக்களை நேரில் சந்தித்து காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.
இதையடுத்து, அப்பகுதியை சேர்ந்த பெண்மணி ஒருவரின் வீட்டு பாத்திரங்களை கழுவினார். அந்தவகையில், ‘அம்மா… தாயே..’ ஓட்டு போடுங்க என்று கெஞ்சாத குறையாக கனிமொழி வாக்கு கேட்டதாக சொல்லப்படுகிறது. இந்த சம்பவத்தைதான் நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.