முதியவரை மிரட்டி கட்சியில் இணைத்த உடன்பிறப்பு!

முதியவரை மிரட்டி கட்சியில் இணைத்த உடன்பிறப்பு!

Share it if you like it

பா.ஜ.க. துண்டு அணிந்திருந்த முதியவரை தி.மு.க. உடன்பிறப்பு ஒருவர் மிரட்டிய காணொளி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வைக்கும் விதமாக பாரதப் பிரதமர் மோடி கடந்த-8- ஆம் தேதி சென்னை வந்தார். இதனை தொடர்ந்து, சென்னை பல்லாவரம் பொதுக்கூட்டத்தில் பாரதப் பிரதமர் மோடி உரையாற்றும் வகையில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்நிகழ்ச்சியில், தமிழக முதல்வர் ஸ்டாலின், பாரதப் பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த பொதுக்கூட்டத்தில், பா.ஜ.க. மற்றும் தி.மு.க.வை சேர்ந்த ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர். இந்த நிலையில், பா.ஜ.க. துண்டு அணிந்து கொண்டு முதியவர் ஒருவர் கூட்டத்திற்கு வந்திருக்கிறார். இதனை பார்த்த தி.மு.க. உடன்பிறப்பு ஒருவர் முதியவரை தனிமையில் அழைத்து சென்று இருக்கிறார். அப்போது, அவரது கழுத்தில் இருந்த பா.ஜ.க. துண்டை கழற்றுமாறு அதிகார தோணியில் பேசியிருக்கிறார்.

தி.மு.க. ரெளடியிடம் சிக்கி கொண்ட முதியவர் என்ன? செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்று இருக்கிறார். ரெளடியின் மிரட்டல் தோணி தொடரவே தனது கழுத்தில் இருந்த பா.ஜ.க. துண்டை முதியவர் கழற்றி இருக்கிறார். இதையடுத்து, தி.மு.க. ரெளடி தனது கழுத்தில் இருந்த தனது கட்சியின் துண்டை எடுத்து முதியவர் கழுத்தில் போட்டியிருக்கிறார்.

அப்பாவி பொதுமக்களை மிரட்டி தி.மு.க.வில் உறுப்பினர் சேர்க்கை நடைபெறுகிறதா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Share it if you like it