திருப்பூரை சேர்ந்த பெண்மணி ஒருவர் குடித்து விட்டு சாலையில் உருண்டு ரகளை செய்த காணொளி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கு உண்டு என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கூறினார். இதையடுத்து, தி.மு.க.வின் பட்டத்து இளவரசர் உதயநிதி ஸ்டாலின், தூத்துக்குடி எம்.பி. கனிமொழி உள்ளிட்டவர்கள் இதே கருத்தை முன்மொழிந்தனர். இதையடுத்து, தமிழகத்தில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அந்த வகையில், தமிழக முதல்வராக ஸ்டாலின் இருந்து வருகிறார். இந்த, அரசு அமைந்து இரண்டு வருடங்களை பூர்த்தி செய்ய உள்ளது. அந்த வகையில், பல்வேறு வாக்குறுதிகளை விடியல் அரசு இன்று வரை முழுமையாக நிறைவேற்றவில்லை. அதில், ஒன்றுதான் பூரண மதுவிலக்கு.
இதனிடையே, தமிழகத்தில் மது குடிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. குறிப்பாக, பெண்களும் மதுவிற்கு அடிமையாகும் சம்பவங்கள் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில்தான், திருப்பூரை சேர்ந்த பெண்மணி ஒருவர் மதுவிற்கு அடிமையாக சாலையில் செய்த அட்டகாசம் பொதுமக்களிடையே பேசுப்பொருளாக மாறியுள்ளது.
இதுகுறித்தான செய்தியை பிரபல ஊடகமான பாலிமர் வெளியிட்டுள்ளது. அதன் லிங்க் இதோ.
.