எங்க அப்பா பந்து வீசினால் யாராலயும் அடிக்க முடியாது என சட்ட சபையில் உதயநிதி ஸ்டாலின் பேசிய சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தி இருக்கிறது.
காமராஜர், பசும்பொன், கக்கன், போன்ற மூத்த முன்னோடிகள் இருந்த சபையாக சட்டமன்றம் இருந்தது. ஆனால், இன்றோ அமைச்சர் உதயநிதியின் ரசிகர் மன்றமாக மாறியிருக்கிறது. மக்கள் பிரச்சனைகள் குறித்து அவையில் பேசாமல் முதல்வரை மகன் பாராட்டுவதும், மகனை அமைச்சர்கள் பாராட்டுவதுமாக இருந்து வருகிறது.
இதனிடையே, தி.மு.க. எதிர்க்கட்சி வரிசையில் இருந்த போது முன்னாள் எதிர்க்கட்சியின் துணை தலைவராக இருந்தவர் துரைமுருகன். இவர், அப்போதைய சபாநாயகரிடம் வைத்த கோரிக்கை இதுதான் : கேண்டினில் கொடுக்கப்படும் காப்பி தண்ணீர் போல் உள்ளது. தயவு செய்து தரமான காப்பி வழங்க ஏற்பாடு செய்யுங்கள் என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார். மக்கள் பிரச்சனைக்கு முன்னுரிமை வழங்காமல் ஒரு காப்பிக்கு முக்கியத்துவம் கொடுத்த துரைமுருகனை நெட்டிசன்கள் தூர் வாரி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதல்வராக ஸ்டாலின் இருந்து வருகிறார். இப்போதாவது, தொகுதி பிரச்சனைக்கு முன்னுரிமை கொடுத்து பேசுவார்கள் என்று பொதுமக்கள் எதிர்பார்த்தனர். ஆனால், அமைச்சர் உதயநிதி எங்க அப்பா நல்லா பந்து வீசுவார் என சட்டசபையில் பேசியுள்ளார். இச்சம்பவம்தான், பொதுமக்கள் மத்தியில் கடும் எரிச்சலை ஏற்படுத்தி இருக்கிறது.