குழந்தைக்கு தவறான சிகிச்சை: தர்ணாவில் ஈடுபட்ட காவலர்!

குழந்தைக்கு தவறான சிகிச்சை: தர்ணாவில் ஈடுபட்ட காவலர்!

Share it if you like it

தனது குழந்தைக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதாக காவலர் ஒருவர் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழகத்தில், திராவிட முன்னேற்ற கழகத்தின் ஆட்சி நடைபெற்று வருகிறது. மக்கள் விரும்பும் அரசாக விடியல் ஆட்சி இல்லை என்பதே பலரின் ஒருமித்த கருத்தாக உள்ளது. பெண்கள், பெண் குழந்தைகள் மற்றும் பெண் காவலர்களுக்கு கூட உரிய பாதுகாப்பு இல்லை என சமூக ஆர்வலர்கள் இந்த அரசை மிக கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

இப்படிப்பட்ட சூழலில், காவலர் ஒருவர் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்து தனது ஆதங்கத்தை இவ்வாறு வெளிப்படுத்தி இருக்கிறார் : தனது மகளுக்கு அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையில் புகார் அளித்தேன். எனினும், எனது புகார் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டியிருக்கிறார். மேலும், தனது மகளுடன் சாலையில் அமர்ந்து தர்ணா செய்த சம்பவம்தான் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழக காவலரின் குழந்தைக்கே இந்த நிலை என்றால் சாதாரண மக்களின் நிலை எவ்வாறு? இருக்கும் என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

v


Share it if you like it