தி.மு.க. முன்னாள் எம்.பி. ஆர்.எஸ். பாரதி முன்னுக்கு பின் முரணமாக பேசிய காணொளி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிரபல ஊடக நெறியாளர் பாண்டே. இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தி.மு.க. முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ். பாரதியிடம் நேர்காணல் நடத்தினார். அதில், மத்திய அரசின் மெட்ரோ ரயில் திட்டங்கள் குறித்த கேள்வி ஒன்றினை முன்வைத்தார். இதற்கு, ஆர்.எஸ். பாரதி கூறியதாவது : அது, மத்திய அரசின் திட்டம் மட்டுமல்ல அதில் நம்முடைய பணமும் இருக்கு. இந்த திட்டத்தை கொண்டு வர ஜப்பான் வரை சென்று நிதிபெற்று வந்த அரசு தி.மு.க. என கூறினார்.
இதனிடையே, தி.மு.க.வின் சொத்துப்பட்டியலை தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சமீபத்தில் வெளியிட்டார். அதில், மெட்ரோ திட்டத்தில் தி.மு.க. அரசு மிகப்பெரிய முறைகேடு செய்துள்ளது என அண்ணாமலை குற்றம் சாட்டியிருந்தார். இதையடுத்து, பத்திரிகையாளர்களை ஆர்.எஸ். பாரதி சந்தித்தார். அப்போது, மெட்ரோ திட்டம் மத்திய அரசு உடையது. மாநில அரசு உடையது அல்ல. இதில் முறைகேடு எதுவும் நடக்கவில்லை என்ற ரீதியில் பேசியிருந்தார். இந்த காணொளிதான் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.