தி.மு.க. எம்.எல்.ஏ. உள்ளிட்ட முக்கிய புள்ளிகளின் வீடுகளில் ஐ.டி. சோதனை தற்போது நடைபெற்று வருகிறது. இச்சோதனை, ஆளும் கட்சியினர் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை. இவர், கடந்த ஏப்ரல்-14- ஆம் தேதி தி.மு.க.வின் சொத்துப்படியலை வெளியிட்டார். இந்த, சொத்துப்பட்டியல் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இதையடுத்து, அரசியல் நோக்கர்கள், பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் என பலர் தி.மு.க.வை கேள்வி கணைகளால் தொடர்ந்து துளைத்தெடுத்து வருகின்றனர்.
இப்படிப்பட்ட சூழலில் தான், தி.மு.க.வின் மூத்த தலைவர் மற்றும் அண்ணாநகர் சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருப்பவர் மோகன் மற்றும் அவரது மகன் கார்த்திக் வீட்டில் இன்று வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி இருக்கின்றனர். கார்த்திக் G Square நிறுவன நிர்வாகி ஆவார். இவருக்கு, சென்னை, ஆந்திரா, தெலுங்கானா, பெங்களூர் உள்ளிட்ட மாநிலங்களில் ஏராளமான சொத்துக்கள் உள்ளன. தி.மு.க. ஆட்சிக்கு வந்த குறுகிய காலத்தில் G Square நிறுவனத்திற்கு எப்படி 32 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து? வந்தது என தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.