அண்ணாமலையின் வீடியோவை எடிட் செய்து போலியாக வெளியிட்ட தி.மு.க.விற்கு அண்ணாமலை தக்க பதிலடியை கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கடந்த ஏப்-14-ல் தி.மு.க.வின் சொத்துப்பட்டியலை வெளியிட்டார். அந்த வகையில், தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் ஆடியோ ஒன்றை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். இதையடுத்து, இந்த விவகாரம் பொதுமக்கள் மத்தியில் பேசுப்பொருளாக மாறியது. இதனை தொடர்ந்து, பலர் தி.மு.க. மேலிடத்தை வெளுத்து வாங்கி வருகின்றனர். இதற்கு, உரிய பதில் அளிக்க முடியாமல் தி.மு.க. இன்று வரை திணறி வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், தி.மு.க.வினர் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் காணொளி ஒன்றை எடிட் செய்து சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.
இந்த நிலையில், தி.மு.க.வின் பித்தலாட்டத்திற்கு தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தக்க பதிலடியை கொடுத்துள்ளார். மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.