டாஸ்மாக் வருமானத்தில் இந்த ஆட்சியை  நடத்த வேண்டிய அவசியமில்லை – செந்தில் பாலாஜி!

டாஸ்மாக் வருமானத்தில் இந்த ஆட்சியை நடத்த வேண்டிய அவசியமில்லை – செந்தில் பாலாஜி!

Share it if you like it

டாஸ்மாக் வருமானத்தில் இந்த அரசை நடத்த வேண்டிய அவசியமில்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியிருக்கிறார்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால், மதுக்கடைகளை மூடுவோம் என தி.மு.க. தலைவர் ஸ்டாலின், தூத்துக்குடி எம்.பி. கனிமொழி, பட்டத்து இளவரசர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் கடந்த சட்டமன்ற தேர்தலில் பொதுமக்களுக்கு வாக்குறுதி கொடுத்தனர். இதையடுத்து, தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அந்தவகையில், விடியல் ஆட்சி அமைந்து இரண்டு வருடங்களை பூர்த்தி செய்துள்ளது. எனினும், பூரண மதுவிலக்கு குறித்து இன்று வரை தி.மு.க. அரசு வாய் திறக்கவில்லை.

இப்பட்டிப்பட்ட சூழலில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைதுறை அமைச்சர் செந்தில் பாலாஜி இவ்வாறு கூறியிருக்கிறார் ; டாஸ்மாக் வருமானத்தில் அரசை நடத்த வேண்டிய அவசியம் இல்லை. மதுபானங்களை வழங்கும் தானியங்கி இயந்திரம், டாஸ்மாக் கடைகளுக்குள்தான் வைக்கப்பட்டிருக்கிறது. பொது இடங்களில் வைக்கப்படவில்லை. 21 வயதுக்கு குறைவானவர்கள் யாராலும் அதிலிருந்து மதுபானத்தை எடுக்க முடியாது. ஆனால், எதிர்க்கட்சிகளும், சில ஊடகங்களும் தவறான தகவல்களை பரப்புகின்றனர். 96 டாஸ்மாக் கடைகளை ஏற்கெனவே மூடியிருக்கிறோம். 500 கடைகளை மூட இருக்கிறோம். டாஸ்மாக் வருமானத்தைக் கொண்டு இந்த அரசை நடத்த வேண்டிய அவசியம் தி.மு.க.வுக்கு இல்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி காட்டமாக கூறியிருக்கிறார்.


Share it if you like it