6 – ஆம் வகுப்பு மாணவனும் கஞ்சா புகைப்பதாக பள்ளியின் தலைமை ஆசிரியர் கூறிய சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழகத்தில், தி.மு.க. ஆட்சி அமைந்த பின்பு சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளது. இதன்காரணமாக, பொதுமக்கள் அச்சத்துடன் வாழும் சூழல் ஏற்பட்டுள்ளது. பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பு என்பது பெரும் கேள்விக்குறியாக மாறியுள்ளது. பள்ளி, கல்லூரி மாணவிகள் மதுவிற்கு அடிமையாகும் காணொளிகள், தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் வந்த வண்ணம் உள்ளது.
இதனிடையே, மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அரசு மேல்நிலை பள்ளி உள்ளது. இப்பள்ளியில், பயின்று வரும் 11-ம் வகுப்பு மாணவன், கஞ்சா புகைத்து விட்டு சக மாணவர்கள் தம்மை அடிப்பதாக தனது பெற்றோரிடம் புகார் தெரிவித்து இருக்கிறான். இதையடுத்து, மாணவரின் தந்தை பள்ளியின் தலைமை ஆசிரியரை சந்தித்து முறையிட்டு இருக்கிறார். அதற்கு, பள்ளியின் தலைமை ஆசிரியர் கூறியதாவது; பள்ளிக்கு வெளியே கஞ்சா விற்பனை நடைபெற்று வருகிறது. 6 – ஆம் வகுப்பு மாணவனே கஞ்சா புகைக்கிறான். காவல்துறையில் புகார் தெரிவித்து இருக்கிறோம். எந்தவித நடவடிக்கையையும் நாங்கள் எடுக்கவில்லை என்று எப்படி நீங்கள் கூறலாம் என தலைமை ஆசிரியர் மாணவனின் பெற்றோரிடம் வாக்குவாதம் செய்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.