தூக்கி அடித்தாய் இன்றைக்கு… ஆப்பு அடிப்பேன் நாளைக்கு… தீயாய் பரவும் காணொளி!

தூக்கி அடித்தாய் இன்றைக்கு… ஆப்பு அடிப்பேன் நாளைக்கு… தீயாய் பரவும் காணொளி!

Share it if you like it

பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தனது சோகத்தை பாட்டாக பாடுவது போன்று இந்தா வாயின்கோ காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளது.

தமிழக நிதியமைச்சாரக இருந்தவர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன். இவர், அண்மையில் பேசிய ஆடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதில், கடந்த ஒரு வருடத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சபரீசன் ரூ. 30,000 கோடி சொத்து குவித்துள்ளனர் என்ற திடுக்கிடும் தகவலை கூறியிருந்தார். இந்த ஆடியோதான், தமிழக மக்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.

இதனை தொடர்ந்து, தமிழக அமைச்சரவையில் சில மாற்றங்களை ஆளும் கட்சி செய்தது. அந்த வகையில், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அந்த பதவியில் இருந்து தூக்கி அடிக்கப்பட்டார். இதையடுத்து, அவருக்கு ஐ.டி. துறை ஒதுக்கப்பட்டது. இப்படிப்பட்ட சூழலில், இந்தா வாயின்கோ யூ டியூப் சேனல் அபூர்வ சகோதரர்கள் படத்தில் வரும் பாடல் ஒன்றை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சோகத்துடன் பாடுவது போன்று வெளியிட்டுள்ளது.


Share it if you like it