திராவிட மாடல் அரசுதான் இந்தியாவிற்கே வழிகாட்டினு சொல்லிருப்பாங்களே..?

திராவிட மாடல் அரசுதான் இந்தியாவிற்கே வழிகாட்டினு சொல்லிருப்பாங்களே..?

Share it if you like it

பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சியில் அமர்ந்த தி.மு.க.வை கிண்டல் செய்யும் விதமாக வடிவேலுவின் காமெடி காட்சி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கடந்த, 2021 – ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து, தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பு ஏற்றுக் கொண்டார். இவர், முதல்வராக பொறுப்பு ஏற்றுக்கொண்டு ஓர் ஆண்டு நிறைவு பெற்றுள்ளது. இதனிடையே, மகளிருக்கு ரூ.1000, கல்வி கடன் மற்றும் நகைக்கடன் ரத்து, சிலிண்டர் விலை குறைப்பு உள்ளிட்ட பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை தி.மு.க. வழங்கி இருந்தது. ஆனால், கொடுத்த வாக்குறுதிகளில் பெரும்பாலானவை இன்று வரை நிறைவேற்றப்படவில்லை என்பதே நிதர்சனமான உண்மை. இப்படிப்பட்ட சூழலில், தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதியை பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலுவின், காமெடியுடன் ஒப்பிட்டு நெட்டிசன்கள் செய்து இருக்கும் தரமான சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


Share it if you like it