தமிழ்நாடே இருளில் மிதக்கும்: மின்வாரிய ஊழியர் அரசிற்கு எச்சரிக்கை?!

தமிழ்நாடே இருளில் மிதக்கும்: மின்வாரிய ஊழியர் அரசிற்கு எச்சரிக்கை?!

Share it if you like it

தி.மு.க. அரசுக்கு மின்வாரிய ஊழியர் மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய காணொளி ஒன்று தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால், உங்களது அனைத்து கோரிக்கைகளையும் உடனே நிறைவேற்றுவோம் என அரசு ஊழியர்களுக்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் உறுதியளித்திருந்தார். ஆனால், தி.மு.க. அரசு அமைந்த பின்பு அவர்களது கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றபடவில்லை என்ற குற்றச்சாட்டு இன்று வரை இருந்து வருகிறது. அதனை மெய்ப்பிக்கும் வகையில், மின்வாரியத்தை சேர்ந்த ஊழியர் ஒருவர் தி.மு.க. அரசிற்கு எதிராக இவ்வாறு பேசியிருக்கிறார் ;

மின்சாரத்தை நாங்களா விநியோகம் செய்கிறோம். நாங்களா கொள்முதல் செய்கிறோம். நீங்கள் சொல்லும் பணியை செய்யும் ஊழியர்கள் நாங்கள். எங்களால், எப்படி நஷ்டமாகும். நாங்கள் திருடுகிறோமா?  கொள்ளையடிக்கிறோமா? இதையெல்லாம் யார் செய்கிறார்கள். அரசியல்வாதிகள் செய்கிறார்கள். உங்கள் துறையை சேர்ந்த மேல் அதிகாரிகள் செய்கிறார்கள். அடிமட்ட ஊழியர்களான எங்களது உரிமைகளை ஏன்? பறிக்கிறீர்கள். உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது. இதுபோன்று நடைபெற்றால் தமிழகம் இருளில் போய்விடும். இரவு, பகல் என்று எதுவும் இருக்காது. வெறும் இரவாக போய்விடும். மின்சார ஊழியர்களை சாதாரணமாக நினைக்காதீர்கள். எல்லோரும் கோவத்தில் இருக்கிறோம்.

குழந்தைகளை படிக்க வைக்க முடியவில்லை. அரிசி பருப்பு வாங்க முடியவில்லை. எங்களுக்கு, எவ்வளவு செலவு இருக்கிறது. அரசு ஊழியர்கள் இல்லாமல் தி.மு.க. இன்று ஆட்சிக்கு வந்து இருக்க முடியுமா?  இதையெல்லாம், நினைத்து பார்க்க வேண்டும். இது எல்லாம், நீங்கள் எடுக்கும் முடிவா? அமைச்சர்கள் எடுக்கும் முடிவா? அல்லது மின்துறையை சார்ந்த அதிகாரிகள் எடுக்கும் முடிவா?

அரசாங்கத்தை நடத்துவது யார்? எத்தனை தொழிற்சங்கம் குமுறுகிறோம். எங்கள் மீது உங்களுக்கு கருணை இல்லை. ஒவ்வொன்றையும் பெற உங்களிடம் போராடி பெற வேண்டி இருக்கு. இது எல்லாம், ரொம்ப தப்பு என தனது வேதனையை வெளிப்படுத்தி இருக்கிறார்.

மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


Share it if you like it