திரௌபதி அம்மன் விவகாரம்: தமிழக அரசிற்கு அஸ்வத்தாமன் கடும் கண்டனம்!

திரௌபதி அம்மன் விவகாரம்: தமிழக அரசிற்கு அஸ்வத்தாமன் கடும் கண்டனம்!

Share it if you like it

திரெளபதி அம்மன் கோவிலுக்கு சீல் வைக்கப்பட்டுள்ள விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், பா.ஜ.க. மூத்த தலைவர் அஸ்வத்தாமன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது :

மேல்பாதி கிராமத்தின் வன்னியர்களின் குல தெய்வமான திரௌபதி அம்மன் கோவிலுக்கு சீல் வைத்த திமுக அரசை வன்மையாக கண்டிக்கிறேன்! வேங்கைவயல் பிரச்சனையில், ஏழு மாதங்கள் ஆகியும், அங்கு பட்டியல் சமூக மக்களுக்கு நீதி வழங்க வக்கில்லாத திமுக அரசு, இன்று வேண்டுமென்றே திரௌபதி அம்மன் கோவிலை பூட்டி சீல் வைத்துள்ளது. மேல்பாதி ஊரில் உள்ள பிடாரி அம்மன் கோவில், அனுமன் கோவில், விநாயகர் கோவில், முருகன் கோவில் ஆகிய கோவில்களில் பட்டியல் சமூக மக்கள் அனுமதிக்கப்பட்டுவரும் நிலையில், அங்கு தீண்டாமை இருப்பதாக சொல்லப்படுவது அபத்தமானது.

எறையூரில் சில வருடங்களுக்கு முன்பு வன்னியர் கிருஸ்தவர்களுக்கும், ஆதி திராவிட கிருஸ்தவர்களுக்கும் இடையே கலவரம் ஏற்பட்டு இரண்டு பேர் காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். அந்த பிரச்சனையில், அந்த ஊரின் சர்ச் சீல் வைக்கப்படவில்லை. ஆனால், மேல்பாதி-யில் மட்டும் வேண்டுமென்றே இந்து கோவில் என்பதால் அதன் வழிபாடு முடக்கப்பட்டுள்ளது. தனியார் பட்டா நிலத்தில் அமைக்கப்பட்டு, சில குடும்பங்களுக்கு மட்டுமே குல தெய்வமாக இருக்கும் திரௌபதி அம்மன் கோவிலில், அறநிலைய துறைக்கு என்ன வேலை? அறநிலைய துறையின் அபகரிப்பு முயற்சியை உயர்நீதிமன்றமே ரத்து செய்துவிட்ட பிறகும், அது அறநிலைய துறைக்கு சொந்தமான கோவில் என்று ஊடகங்கள் குறிப்படுவது ஏன்? அந்த கோவிலில் பிராமணர் சமூகம் உட்பட வேறு எந்த சமூகமும் அனுமதிக்கப்படுவதில்லை.

அந்த கோவிலை குலதெய்வமாக கொண்டிராத, அல்லது அவர்களது உறவினர்கள் அல்லாத, பிற வன்னியர்களும் அனுமதிக்கப்படுவதில்லை. பிறகு எப்படி அதை தீண்டாமை என சொல்லமுடியும் ? மேல்பாதி கிராமத்தில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக எனது தலைமையில் ஒரு சமாதானக் குழு உருவாக்கப்பட்டு அதில், பறையர் பேரியக்கம் தலைவர் சிவகுரு பறையனார், வட்டார வன்னியர் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில பொறுப்பாளர்கள் வர்மா, பொன்னுரங்கம் ஆகியோர் இணைந்து மேல்பாதி கிராமத்திற்கு சென்று பறையர் சமூக பெருமக்களையும், வன்னியர் சமூக பெருமக்களையும் சந்தித்தோம்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சி தலைவரையும் சந்தித்து ஆக்கப்பூர்வமான தீர்வுகளை முன்வைத்து வந்திருந்தோம். எங்கள் சமாதானக் குழு மேற்கொண்டுவரும் சமாதான முயற்சிகள் வெற்றியடைந்து அமைதி நிலை திரும்பும் நிலையில், அதை குலைக்கும் விதமாக வேண்டுமென்றே திரௌபதி அம்மன் கோவிலை பூட்டி சீல் வைத்துள்ளது திமுகவின் விடியா அரசு! இது அந்த கிராமத்தில் அமைதி திரும்பவதை இந்த திமுக அரசு விரும்பவில்லை என்பதையே இது காட்டுகிறது.

வேண்டுமென்றே வன்மத்தோடு இரு சமூகங்களிடையே பி்ரச்சனையை உண்டாக்குவது போல ஒரு அரசாங்கமே நடந்து கொள்வது வேதனையானது. திமுக அரசின் இந்த செயல்பாடு வன்னியர் பெருமக்களின் திரௌபதி வழிபாட்டை குலைத்து சீரழிக்கும் நோக்கத்தில் செய்யப்பட்டிருக்கிறது. திமுகவின் விடியா அரசு திரௌபதி கோவிலை உடனடியாக விடுவித்து பட்டா நிலத்தில் இருக்கிற அந்த கோவிலை அபகரிக்கிற முயற்சியை உடனடியாக கைவிட வேண்டும்.


Share it if you like it