மதுவிலக்குத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் செந்தில் பாலாஜியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். இதயைடுத்து, மூத்த அமைச்சர்கள், மூத்த தலைவர்கள் உள்ளிட்டவர்கள் செந்தில் பாலாஜி சிகிச்சை பெற்று வரும் அறையின் வாயிலில் அவரின் தரிசனத்திற்காக காத்திருக்கும் காணொளி தற்போது வைரலாகி வருகிறது.