அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு காட்டிய ஆர்வத்தை வேங்கை வயலில் ஏன் காட்டவில்லை என மனித உரிமை ஆணையத்தை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.
மின்சாரம், மதுவிலக்குத்துறை அமைச்சராக இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர், நேற்றைய தினம் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, திடீரென அவருக்கு உடல் நடலக்குறைவு ஏற்பட்டது. அதனை தொடர்து, சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். இப்படிப்பட்ட சூழ்நிலையில், அமைச்சர் கைது செய்யப்பட்டதில் மனித உரிமை மீறல் இருக்கிறதா? என்பது குறித்து விசாரணையை மேற்கொள்ள மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் மருத்துவமனைக்கு நேரில் சென்றார்.
இதே விடியல் ஆட்சியில், 23 பேர் கள்ளச்சாரயம் அருந்தி உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து, டாஸ்மாக் சரக்கை குடித்து இருவர் மரணமடைந்தனர். இதனிடையே, புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பொதுமக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மனித மலம் கலந்த சம்பவம், திருநெல்வேலியில் குற்ற வழக்குகளில் சிக்கிய குற்றம் சாட்டப்பட்டவர்களின் பற்கள் பிடுங்கிய ஏஎஸ்பி பல்வீர் சிங் என தொடர்ச்சியாக பல்வேறு மனித உரிமை மீறல்கள் நடைபெற்றுள்ளன. இதுகுறித்து மனித உரிமை ஆணையம் நடத்திய விசாரணை என்ன? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.