காசா கொடுக்குற… இந்தா கேஸ்… ஆயா மீது பாய்ந்த வழக்கு!

காசா கொடுக்குற… இந்தா கேஸ்… ஆயா மீது பாய்ந்த வழக்கு!

Share it if you like it

பஸ்ஸில் ஓசி பயணம் மேற்கொள்ள மாட்டேன் டிக்கெட் கொடு என்று கண்டக்டரிடம் வாக்குவாதம் செய்த பாட்டி மீது தி.மு.க. அரசு வழக்கு பதிவு செய்து இருப்பது தமிழக மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

தி.மு.க. சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், இப்ப, நீங்க எப்படி? பஸ்ஸில் வருகிறீர்கள். இங்கிருந்து, கோயம்பேடு போனாலும் எங்கே? போனாலும் ஓசீ பஸ்ஸில் தானே செல்கிறீர்கள் என பேசியிருந்தார். அமைச்சர் பொன்முடியின், அருவருக்கதக்க பேச்சு தமிழக பெண்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. அமைச்சர் பொன்முடியின் கருத்திற்கு தமிழக எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்து இருந்தனர்.

இப்படிப்பட்ட சூழலில், கோவை மாவட்டத்தை சேர்ந்த மூதாட்டி ஒருவர் அரசு பேருந்தில் பயணம் மேற்கொண்டு இருக்கிறார். அப்போது, நான் ஓசியில் வரவிரும்பவில்லை எனக்கு டிக்கொட் கொடு என கண்டக்டரிம் அப்பாட்டி வாக்குவாதம் செய்து இருக்கிறார். இக்காணொளியை, யாரோ ஒருவர் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு இருக்கிறார். இதனை தொடர்ந்து, இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பேசுப்பொருளாக மாறியிருந்தது. இதற்கு, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, தனது ட்விட்டர் பக்கத்தில், இதுதான் “தமிழ் மாடல்”! சுயமரியாதை சுயமரியாதை என்று நொடிக்கு நூறு முறை கீச்சலிடும் “திராவிட மாடல்” அரசுக்கு சுயமரியாதை என்றால் என்ன என்று பாடம் புகட்டும் மூதாட்டி என குறிப்பிட்டு இருந்தார்.

இப்படிப்பட்ட சூழலில், கண்டக்டரிடம் காசு கொடுத்து டிக்கெட் கேட்டு வாக்குவாதம் செய்த பாட்டி துளசி அம்மாள் உட்பட 4 பேர் மீது மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து இருக்கின்றனர். ஓசீ பஸ்ஸில் தானே செல்கிறீர்கள் என தமிழக பெண்களை இழிவுப்படுத்திய அமைச்சர் மீது வழக்கு பதிவு இல்லை. ஆனால், காசு கொடுத்து டிக்கெட் கேட்ட பாட்டி மீது விடியல் அரசு வழக்கு பதிவு செய்து இருப்பது சரியா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Share it if you like it