காவலர் ஒருவர் புகார் அளிக்க வந்த முதியவரை மிகவும் கீழ்த்தரமாகவும், அருவருக்கதக்க வகையில் திட்டி அடித்த காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழகத்தில் விடியல் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த, ஆட்சியில் சட்டம் ஒழுங்கு தொடர்ந்து சந்தி சிரித்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க, பொதுமக்களிடம் தமிழக காவல்துறையினர் நடந்து கொள்ளும் விதம் முகம் சுளிக்கும் வகையில் இருந்து வருகிறது. அந்தவகையில், நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று அரங்கேறி இருக்கிறது.
அதாவது, மூதாட்டி ஒருவர் தனது மருமகள்கள் தம்மை சரியாக பராமரிக்கவில்லை என பள்ளிபாளைய காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்க சென்றுள்ளார். அப்போது, மூதாட்டியின் புகாரை ஏற்காமல் காவல்துறையினர் அலைக்கழித்துள்ளனர். இதனால், மனமுடைந்த மூதாட்டி காவல்நிலைய வாசலில் அமர்ந்து அழுதுள்ளார்.
காவல் நிலைய வாசலில் பாட்டி அமர்ந்து இருப்பதை பார்த்து இரு காவலர்கள் வெளியே வந்துள்ளனர். இதில், ஒரு காவலர் கோபமாக ’ஏய் எந்திரி மேல இது என்ன தெருவா என்று திட்டியிருக்கிறார். மேலும், வயதான மூதாட்டி என்றும் கூட பார்க்காமல் அவரை பிடித்து வெளியே தள்ளிய சம்பவம் தான் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இப்பட்டிப்பட்ட சூழ்நிலையில், அதனை மிஞ்சும் வகையில் மற்றொரு காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த காணொளியில், காவலர் ஒருவர் முதியவர் ஒருவரை மிக கீழ்த்தரமாக திட்டியும், அடித்தும் உள்ளார். இந்த காணொளிதான் தற்போது வைரலாகி வருகிறது.