நாய் வாலை நிமிர்த்த முடியுமா?: பா.ஜ.க. என்றால் ஒரு நீதி… தி.மு.க. என்றால் ஒரு நீதியா?

நாய் வாலை நிமிர்த்த முடியுமா?: பா.ஜ.க. என்றால் ஒரு நீதி… தி.மு.க. என்றால் ஒரு நீதியா?

Share it if you like it

தி.மு.க. ஆபாச பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு பிரபல நடிகை கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

தி.மு.க.வின் மூத்த ஆபாச பேச்சாளர்களில் ஒருவர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி. இவர், அண்மையில் தி.மு.க. பொதுக்கூட்டம் ஒன்றில் பேசுகையில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை மிகவும் கீழ்த்தரமாக பேசியிருந்தார். இந்த, காணொளி பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. இதையடுத்து, சமூக ஆர்லவர்கள், பல்வேறு அரசியல் கட்சிகள் தங்களது கடும் கண்டனங்களை தெரிவித்திருந்தன. இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான், மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் ஆபாச பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி. இந்த நிலையில், பிரபல நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், நாய் வாலை நிமிர்த்த முடியுமா? சிவாஜி கிருஷ்ணமூர்த்தி வாயை திருத்தமுடியுமா. பெண்ணாடம் மதுரையில் இருக்கு என்பதெற்கெல்லாம் உடனடி கைது செய்யும் அரசுக்கு, இது எல்லாம் தெரியாதா? என நடிகை கஸ்தூரி காட்டமாக கூறியுள்ளார்.


Share it if you like it