தி.மு.க. அரசு குபீர் விளக்கம்… பா.ஜ.க. மூத்த தலைவர் விமர்சனம்!

தி.மு.க. அரசு குபீர் விளக்கம்… பா.ஜ.க. மூத்த தலைவர் விமர்சனம்!

Share it if you like it

இதுதொடர்பாக அவர் தனது சமூகவலைத்தள பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார் :

PST கட்டுமான நிறுவனத்திற்கு நிதிநுட்ப பூங்கா கட்டும் ஒப்பந்தம் அளிக்கப்பட்டது குறி்த்து த‌மிழக‌ அரசு அளித்திருக்கக்கூடிய விளக்கம் வியப்பையும், திகைப்பையும் அளிக்கிறது. கருப்பு பட்டியலில் இல்லாத ஒரு நிறுவனம் குறைவான தொகையை ஒப்பந்த புள்ளியில் குறிப்பிட்டதால் அவர்களுக்கு

அளிக்கப்பட்டுள்ளதாகவும், தேசிய நெடுஞ்சாலை ஆணைய பணி கூட அந்த நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், ஏற்கனவே அந்த நிறுவனம் மேற்கொண்ட கட்டுமானங்கள் குறித்த புகார்களை விசாரித்து வருவதாகவும் கூறியுள்ளது, அரசின் அலட்சியத்தையும், அவசரத்தையும், பதற்றத்தையும் வெளிப்படுத்துகிறது.

தமிழக அரசு துறைகளின் கட்டுமானங்களில் தான் இந்த நிறுவனம் குறித்த புகார்கள் எழுந்துள்ளன எனும் நிலையில் அந்த புகார்களின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டியது தமிழக அரசின் கடமை. ஆனால், அதை செய்யாமல் தேசிய நெடுஞ்சாலை ஆணைய ஒப்பந்த பணியை குறிப்பிடுவதும், நீதி மன்ற தடை உத்தரவை

காரணம் காட்டுவதும் தமிழக அரசின் அலட்சியத்தையும், உள்நோக்கத்தையும் தெளிவாக்குகிறது. முன்பு இருந்த அரசு தான் காரணம் என்று சொல்லி விட்டு மீண்டும் அதே தவறை இழைப்பது நியாயமல்ல. குற்றமிழைத்தவர்களை குற்றவாளி கூண்டில் நிறுத்த முயற்சிப்பதில் காட்ட வேண்டிய வேகத்தை அடுத்தவர் மீது குறை சொல்லி, பழி போட்டு தப்பிக்க நினைப்பது முறையல்ல. உடன் தமிழக அரசு நடவடிக்கை எடுப்பதே மக்கள் நலனுக்கு உகந்தது


Share it if you like it