நடிகர்கள் அரசியலுக்கு வருவது சாபக்கேடு: முதல்வர் தமிழரசன் பேசுபேறன்… திருமாவின் காணொளி வைரல்!

நடிகர்கள் அரசியலுக்கு வருவது சாபக்கேடு: முதல்வர் தமிழரசன் பேசுபேறன்… திருமாவின் காணொளி வைரல்!

Share it if you like it

நடிகர்கள் அரசியலுக்கு வரும் சாபக்கேடு தமிழ்நாட்டில் மட்டுமே உள்ளது என வி.சி.க. தலைவர் திருமாவளவன் கூறியிருந்தார். இந்த நிலையில், அவர் நடித்த திரைப்படத்தை சுட்டிக்காட்டி திருமாவை நெட்டிசன்கள் குஸ்கா கிண்டி வருகின்றனர்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன். இவர், நேற்றைய தினம் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்த கேள்வியினை நிருபர்கள் அவரிடம் முன்வைத்தனர். இதற்கு, அவர் கூறியதாவது : நடிகர்கள் அரசியலுக்கு வரும் சாபக்கேடு தமிழ்நாட்டில் மட்டுமே உள்ளது என்று மிக கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார். இந்த நிலையில், மின்சாரம் திரைப்படத்தில் தமிழக முதல்வராக நடித்திருக்கும் திருமாவளவனை நெட்டிசன்கள் கொத்து பரோட்டா போட்டு வருகின்றனர். அரசியலும், சினிமாவும் பிரிக்க முடியாத இரு துறைகள். அரசியலுக்கு வந்த பலர் சினிமாவிலிருந்து வந்தவர்கள்தான் என்று திருமாவளவன் கூறியிருந்தார். இதனிடையே, அன்புத்தோழி உள்ளிட்ட சில படங்களில் திருமாவளன் நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது.


Share it if you like it