இதோ அடுத்த சம்பவம்: காவல் நிலையத்திற்குள் புகுந்த தி.மு.க.வினர்!

இதோ அடுத்த சம்பவம்: காவல் நிலையத்திற்குள் புகுந்த தி.மு.க.வினர்!

Share it if you like it

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த கழக கண்மணிகள் காவல்நிலையத்திற்குள் புகுந்து மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தி.மு.க. ஆட்சிக்கு வந்தால், சட்டம், ஒழுங்கு பாதுகாப்பை உறுதி செய்வேன். யார் தவறு செய்தாலும், அவர்கள் மீது உறுதியான நடவடிக்கை எடுப்பேன். எனது கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் கூட அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பேன் என்று கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கூறியிருந்தார். இதையடுத்து, தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.

இதனை தொடர்ந்து, கட்சியின் அடிமட்ட தொண்டரில் ஆரம்பித்து எம்.பி., எம்.எல்.ஏ. என அனைவரும் தங்களது மனம் போன போக்கில் நடந்து கொள்கின்றனர். இதன்காரணமாக, அரசு ஊழியர்கள் அனுபவிக்கும் மன அழுத்தம் கொஞ்சம் நஞ்சமல்ல என்பதே நிதர்சனம். அதனை மெய்ப்பிக்கும் சம்பவங்கள், தமிழகத்தில் தொடர்ந்து வண்ணம் உள்ளது.

அந்த வகையில், அரசு ஊழியர் ஒருவர் தி.மு.க. அரசை வெளுத்து வாங்கி இருந்தார். இக்காணொளி சமீபத்தில் வைரலாகி இருந்தது. அவர் கூறியதாவது ;

இதுதான் டாஸ்மாக், ஒரு ரூபாய் அதிகமாக வைத்து விற்பனை செய்தபோது எங்களை கண்டித்து இருந்தால். இன்று மிகப்பெரிய திருடனாகவோ, இந்த சமூகத்தால் ஒதுக்கப்பட்ட மக்களாகவோ பார்க்கப்படபோவதில்லை. பிச்சை எடுக்கிற எங்களிடம் பிச்சை வாங்கி சாப்பிடும் அதிகாரிகள் தான், அத்தனை பேரும் டாஸ்மாக்கில் இருக்கிறான். அது, ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருந்தாலும் சரி, குருப் 1 அதிகாரியாக இருந்தாலும் சரி, யாராவது நேர்மையானவனாக இருந்தால் என் மீது வழக்கு பதிவு செய்து பார். என்னை நீதிமன்றத்தில் அழைத்து வாதாடா சொல்லுங்க நான் பதில் சொல்ல தயாராக இருக்கிறேன்.

டாஸ்மாக் உற்பத்தி பொருளின் விலை எவ்வளவு தெரியுமா? வெறும் 20 ரூபாய் தான். அந்த கம்பெனிகளிடமிருந்து கோட்டர் பாட்டிலை தமிழக அரசு ரூ. 20-க்கு கொள்முதல் செய்கிறது. ஆனால், 125 ரூபாய்க்கு அந்த பாட்டில் விற்பனை செய்யப்படுகிறது. தேவையில்லாமல், அரசாங்கத்திற்கு 80 ரூபாய் செல்கிறது. ஒரு குடிகாரன் வயிற்றில் அடித்து அரசு நடத்துபவர்கள் நீங்கள். ரூ.5 & ரூ.10 கூட வாங்கி விற்பனை செய்யும் நாங்கள் திருடன் என்றால், ரூ.80 கூடுதலாக வாங்கும் நீங்கள் யாருடா. இந்த டாஸ்மாகை நடத்தி தான் இந்த நாட்டையே நடத்த முடிகிறது என்றால் நீங்கள் எல்லாம் எதற்குமே லாயக்கு இல்லை என்று தனது கோவத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

இந்த நிலையில், தி.மு.க.வின் முன்னோடியான அண்ணாவின் சிலையை யாரோ சிலர் அவமதிப்பு செய்து இருக்கின்றனர். இதையடுத்து, களத்தில் இறங்கிய காவல்துறை சிலரை பிடித்து தீவிர விசாரணையை மேற்கொண்டு இருக்கிறது. அந்த வகையில், சிலரை விடுவித்தும் இருக்கிறது. இதையறிந்த, தி.மு.க.வினர் குற்றவாளிகளை எப்படி? நீங்கள் விடுவிக்கலாம் என்று காவல் நிலையத்திற்குள் புகுந்து உயர் அதிகாரியை மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்புதான் தமிழக முதல்வர் ஸ்டாலின். தனது கட்சிகாரர்களை எச்சரிக்கும் விதமாக கடிதம் எழுதியிருந்தார். இந்த நிலையில் தான், கழக கண்மணிகள் காவல்துறை உயர் அதிகாரியை மிரட்டியிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


Share it if you like it