தமிழக அரசிற்கு பா.ஜ.க. எம்.எல்.ஏ. திடீர் வேண்டுகோள்!

தமிழக அரசிற்கு பா.ஜ.க. எம்.எல்.ஏ. திடீர் வேண்டுகோள்!

Share it if you like it

தீபாவளிக்கு மூன்று நாட்கள் கடையை மூட வேண்டும் என பா.ஜ.க. மூத்த தலைவர் வானதி சீனிவாசன் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்து இருக்கிறார்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால், பூரண மதுவிலக்கை கொண்டு வருவோம் என கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கூறியிருந்தார். இதையடுத்து, தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அந்த வகையில், தமிழக முதல்வராக பொறுப்பு ஏற்றுக் கொண்டார். இந்த, ஆட்சி அமைந்து 16 மாதங்களை கடந்து விட்டது. இருப்பினும், பூரண மதுவிலக்கு சட்டத்தை ஸ்டாலின் நிறைவேற்றவில்லை. இதன் காரணமாக, தமிழகத்தில் மதுவிற்கு அடிமையாவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

இப்படிப்பட்ட சூழலில் தான், பா.ஜ.க. மூத்த தலைவர் வானதி சீனிவாசன், தீபாவளி பண்டிகை அன்று டாஸ்மாக் கடைகளைத் திறந்து வைத்து இலக்கு நிர்ணயித்ததுக்குப் பதில், நாங்கள் ஆட்சிக்கு வந்து ரோடு இல்லாத பகுதிகளுக்கு ரோடு போட்டோம் எல்லா அரசுப் பள்ளிகளிலும் கழிவறை கட்டிக் கொடுத்தோம், அனைத்து அங்கன்வாடி மையங்களிலும் குழந்தைகளுக்குச் சுகாதாரமான வாழ்வை ஏற்படுத்திக் கொடுத்தோம் என்பதே இலக்காக வைத்திருக்க வேண்டும். டாஸ்மாக்கிற்கு இத்தனை கோடி வருமானம் என்பது ஒரு அரசாங்கத்திற்கு இலக்காக இருக்கக் கூடாது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மூன்று நாள்களும், அதாவது தீபாவளிக்கு முன் தீபாவளிக்குப் பின் மதுக் கடைகளை மூட வேண்டும் என தமிழக அரசுக்கு அவர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.


Share it if you like it