ஹிந்து பண்டிகை: முதல்வருக்கும் சேர்த்து வாழ்த்து சொன்ன அமைச்சர்!

ஹிந்து பண்டிகை: முதல்வருக்கும் சேர்த்து வாழ்த்து சொன்ன அமைச்சர்!

Share it if you like it

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஹிந்துக்களுக்கு தனது வாழ்த்துகளை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார்.

அனைவருக்குமான முதல்வராக நான் இருப்பேன் என கடந்த சட்டமன்ற தேர்தலில் வாக்குறுதி வழங்கியவர் தி.மு.க. தலைவர் ஸ்டாலின். இவர், தமிழக முதல்வராக பொறுப்பு ஏற்றுக்கொண்டு 16 மாதங்கள் நிறைவு ஓடி விட்டன. இந்த, கால கட்டங்களில் விநாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜை, விஜயதசமி உள்ளிட்ட எத்தனையோ பண்டிகைகள் வந்து சென்றுள்ளன. முதல்வர் என்கிற முறையில் இதுவரை ஸ்டாலின் வாழ்த்து கூறியதில்லை. அவர், தி.மு.க. தலைவராக இருக்கும் போது தனது கொள்கைகளில் உறுதியாக இருக்கலாம். முதல்வர் என்று வரும் போது குறிப்பிட்ட ஒரு மத பண்டிகையை மட்டும் புறக்கணிப்பது சரியா என்பதே அனைவரின் கேள்வியாக உள்ளது. அனைத்து மத பண்டிகைகளுக்கும் வாழ்த்து கூற வேண்டிய கடமையும் பொறுப்பும் ஸ்டாலினுக்கு உண்டு.

கிறிஸ்துமஸ், ரம்ஜான், உள்ளிட்ட பண்டிகைகளுக்கு வாழ்த்து கூறும் ஸ்டாலின். ஹிந்துக்கள் மீது மட்டும் தனது வன்மத்தை காட்டுவது ஏன்? என்பதே பலரின் ஒருமித்த கருத்தாக உள்ளது. அமெரிக்கா, பிரிட்டன் என அயல் நாட்டு அதிபர்கள் கூட தீபாவளி பண்டிகைக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து இருக்கின்றனர். ஆனால், தமிழக முதல்வர் ஸ்டாலின் மட்டும் தயக்கம் காட்டி வருகிறார். இப்படிப்பட்ட சூழலில், தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில்,

‘இல்லங்களில் மகிழ்ச்சி ஒளிரட்டும்; அனைவருக்கும் இனிய தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துகள்’ என பதிவிட்டிருக்கிறார். தனது, வாழ்த்து செய்தியில், முதல்வர் ஸ்டாலின் படத்தை பெரிதாகவும், ஈ.வெ.ராமசாமி, அண்ணாதுரை, கருணாநிதி ஆகியோர் படங்களை சிறியதாகவும் அச்சிட்டிருந்தார். தீபாவளி பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்து இருந்த நிதியமைச்சருக்கு நெட்டிசன்களில் தொடங்கி பொதுமக்கள் வரை பலர் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தனர்.

முதல்வருக்கும் சேர்த்து தீபாவளி வாழ்த்து கூறிய அமைச்சரின் செயல் பாராட்டுக்குறியது என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it