மழை வெள்ளத்தால் நாங்கள் மிகவும் நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம் என சூரகாடு பொதுமக்கள் தி.மு.க. அரசு மீது கடுமையான குற்றச்சாட்டினை முன்வைத்துள்ள காணொளி ஒன்று வைரலாகி வருகிறது.
வடக்கிழக்கு பருவமழை தமிழகத்தை புரட்டியெடுத்து வருகிறது. அந்த வகையில், வியாபாரிகள், விவசாயிகள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பு மக்களும் கடும் சிரமத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர். இதுதவிர, ஏழை, எளியவர்கள், தங்களது வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். முகாம்களில், தங்க வைக்கப்பட்டுள்ளவர்கள், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் என பலர் தங்களுக்கு வேண்டிய உதவிகளை செய்யுமாறு சமூக வலைத்தளங்கள் வாயிலாக தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். அவர்களின், அனைத்து கோரிக்கைகளையும் தி.மு.க. அரசு நிறைவேற்றுமா? என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க முடியும்.
இதனிடையே, மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். மற்றும் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் தங்களால் இயன்ற உதவிகளை தொடர்ந்து செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட சூழலில், மயிலாடுதுறை மாவட்டம் சூரகாடு மழையால் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, வெள்ள நீர் சூழ்ந்த அப்பகுதிக்கு பிரபல ஊடகமான தந்தி டிவி குழு சென்றுள்ளது. அப்போது, அவ்வூரை சேர்ந்த நபர் ஒருவர் கூறியதாவது :
300 குடும்பங்கள் நாங்கள் இருக்கிறோம். என்ன செய்வது. பசி, பட்டினியால் வாடுகிறோம். இதே வெள்ள நீரில் நாங்கள் செத்து விடுகிறோம். எங்களிடம், வந்து எப்படி நீங்கள் ஓட்டு கேட்கிறீர்கள். சாப்பாடு, குடிக்க தண்ணீர் மற்றும் அணிந்து கொள்ள துணியில்லாமல் கஷ்டப்படுகிறோம். முதலில், தங்குவதற்கு எங்களுக்கு இடம் கொடுத்தால் போதும் என்று வேதனையுடன் குறிப்பிட்டு இருக்கிறார். மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.