உலக புகழ் பெற்ற முருகன் கோவிலில் பணியாற்றும் அதிகாரிகள் அசைவ உணவு உண்ட சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழகத்தில், தி.மு.க. ஆட்சி அமைந்த பின்பு இதுவரை 100-க்கும் அதிகமான கோவில்கள் இடிக்கப்பட்டு இருப்பதாக பொதுமக்கள் ஸ்டாலின் அரசை மிக கடுமையாக சாடி வருகின்றனர். குறிப்பாக, விடியல் ஆட்சியில், ஹிந்துக்களின் உணர்வுகளை காயப்படுத்தும் சம்பவங்களே தொடர்ந்து நிகழ்ந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில், யூ டூ புரூட்டஸ் எனும் இணையதள ஊடகத்தை நடத்தி வரும் மைனர் விஜய் என்பவன் சிதம்பர நடராஜர் குறித்து அவதூறாக பேசி இருந்தான். அவன் மீது இன்று வரை எந்தவிதமான நடவடிக்கையையும் தி.மு.க. அரசு மேற்கொள்ளவில்லை. இதையடுத்து, வி.சி.க. தலைவர் திருமாவளவன் மற்றும் வன்னியரசு போன்றவர்கள் ஹிந்து ஆலயங்கள் குறித்து தொடர்ந்து அவதூறாக பேசி வருகின்றனர்.
இதனிடையே, திருவள்ளூர் மாவட்டம் அறுபடை வீடுகளில் ஒன்றாக இருப்பது திருத்தணி முருகன் கோவில். உலக புகழ் பெற்ற இக்கோவிலுக்கு நாள்தோறும் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இப்படிப்பட்ட சூழலில், திருத்தணி முருகன் கோவிலுக்கு சொந்தமான பக்தர்கள் தங்கும் விடுதியில் கோவில் அதிகாரிகள் அசைவ உணவு சாப்பிட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், விவரங்களுக்கு பாலிமர் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.