கஞ்சா விற்பனை செய்பவர்களுக்கு எதிராக குரல் கொடுத்த பா.ஜ.க. நிர்வாகிகள் மீது கொடூர தாக்குதலை சமூக விரோதிகள் நிகழ்த்தி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தி.மு.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறி வருகிறார். எனினும், விடியல் ஆட்சியில் நிகழும் அட்டூழியங்களையும், அடாவடிகளையும், பார்க்கும் போது சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கும் நிலையிலேயே இருந்து வருகிறது. ஒருபுறம், கழக முன்னோடிகள், கழக கண்மணிகள், அப்பாவி மக்களை வாட்டி வதைத்து வருகின்றனர். மறுபுறம், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் அதிகார போதையில் திளைத்து வருகின்றனர்.
தமிழகத்தில், நாளுக்கு நாள் சட்டம் ஒழுங்கு மோசமடைந்து வருவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர். இதனிடையே, பா.ஜ.க. மூத்த தலைவரும், செங்கல்பட்டு தெற்கு மாவட்ட பா.ஜ.க. நிர்வாகியும் திருக்கழுக்குன்றத்தை ச் சேர்ந்தவர் துரை தனசேகர். இவர், தனது பகுதிக்கு உட்பட்ட இடங்களில் கஞ்சா விற்பனை அதிக அளவில் நடைபெற்று வருவதாக குற்றம்சாட்டி இருக்கிறார். மேலும், அதனை காணொளியாக வெளியிட்டு மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.
இதுதவிர, கஞ்சா விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையில் புகார் தெரிவித்தாக சொல்லப்படுகிறது. இதனால், உஷ்ணமான கஞ்சா வியாபாரிகள் திட்டமிட்டு தனசேகர் மீது கொடூர தாக்குதலை நிகழ்த்தியுள்ளனர். இதனால், பலத்த காயமடைந்த தனசேகர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தகவலறிந்த, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மருத்துவமனைக்கு நேரில் சென்று தனசேகர் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.