படுகொலை செய்தவரின் உடலை பிளாஸ்டி பையில் சுற்றி சமூக விரோதிகள் தெருவோரம் வீசி சென்ற சம்பவம் தமிழக மக்கள் மத்தியில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழகத்தில், ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்ற கழகத்தின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இவர், முதல்வராக பொறுப்பு ஏற்றுக் கொண்ட பின்பு சட்டம் ஒழுங்கு எந்த அளவில் இருந்து வருகிறது என்பதை அறிவார்ந்த தமிழக மக்கள் நன்கு அறிவர். இதுதவிர, பள்ளி மாணவ, மாணவிகள் மதுவிற்கு அடிமையாவதும், கல்லூரி மாணவர்கள் கஞ்சா போதையில் சுற்றி திரிவது என தமிழகம் இருண்ட காலத்தை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது. மேலும், கொலை, கொள்ளை, என ரவுடிகளின் கூடாரமாக தமிழகம் மாறி வருகிறது என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கும் குற்றச்சாட்டினை மறுக்கவும் முடியவில்லை.
இப்படிப்பட்ட சூழலில், அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் இவ்வாறு பேசினார்; இங்கே, வந்து இருப்பவர் இன்று டி.எஸ்.பியாக உயர்ந்து இருக்கிறார். ஒரு காலத்தில், எஸ்.ஐ.யாக இருந்த போது எனக்கு செக்யூரிட்டியாக இருந்தவர். அவருக்கு, இருக்கும் திறமை என்னவென்றால், என்ன வேண்டுமானாலும் செய்ய கூடிய ஆற்றல் பெற்றவர். ஒருவரை குற்றவாளியாக மாற்றவும் முடியும். குற்றவாளியை அதில் இருந்து காப்பாற்றவும் முடியும். இதற்கு, மேல் என்னால் எதுவும் சொல்ல முடியாது. அவர் எங்களோடு வளர்ந்தவர் என குறிப்பிட்டு இருந்தார்.
இப்படிப்பட்டவர்கள் காவல்துறையில் இருந்தால், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எவ்வாறு இருக்கும் என்பதே அனைவரின் கேள்வியாக இருக்க முடியும். இப்படிப்பட்ட சூழலில், சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்த தொழிலதிபரை கொடூரமான முறையில் கொலை செய்து அவரின் உடலை பிளாஸ்டிக் கவரில் சுற்றி நெற்குன்றம் சின்மயா நகரில் யாரோ வீசி சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.