சன் டி.வி. ஊடக விவாதத்தில் கலந்து கொண்ட ஆளூர் ஷாநவாஸை பிரபல அரசியல் விமர்சகர் பி.ஆர் சீனிவாசன் நோஸ்கட் செய்த காணொளி ஒன்று வைரலாகி வருகிறது.
பிரபல ஊடகமான சன் டிவி. கேள்வி களம் எனும் நிகழ்ச்சியை நேற்றைய தினம் நடத்தி இருந்தது. இந்த நிகழ்ச்சியில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ ஆளூர் ஷாநவாஷ், தி.மு.க.வின் தீவிர ஆதரவாளரும், பூ உலகின் நண்பன் அமைப்பை சேர்ந்த சுந்தரராஜன் உள்ளிட்ட முக்கிய விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.
அந்த வகையில், வி.சி.க. எம்.எல்.ஏ. ஷாநவாஷ் பேசும் போது, பகவத் கீதையை தேசிய நூலாக அறிவிப்பேன் என்று பா.ஜ.க. சொல்லும் போது, திருக்குறளை ஏன்? தேசிய நூலாக அறிவிக்க கூடாது. ஊங்கள் நூல் தானே, உங்கள் கருத்து எல்லாம் அதில் இருக்கு தானே என்று கொந்தளித்து இருந்தார். இதற்கு, சீனிவாசன் திருக்குறளை உங்கள் நூல் எங்கள் நூல் என்று பிரித்து பேசாதீர்கள் அது அனைவருக்குமான நூல் அது நம்முடைய நூல். திருக்குறளில் உள்ள 1,330 குறளையும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியும். உங்களால் அதனை ஏற்றுக் கொள்ள முடியுமா? கொல்லாமையை ஏற்றுக் கொள்ள முடியுமா? புலால் உண்ணாமையை ஏற்றுக் கொள்ள முடியுமா? என்று கேள்வி எழுப்பினார்.
இந்த கேள்வியை சற்றும் எதிர்பார்க்காத ஷாநவாஷ் இதற்கு என்ன பதில் கூறலாம் என்று யோசிக்க ஊடக நெறியாளர் குணம் ஆகாதா குணசேகரன் மற்றும் தி.மு.க. ஆதரவாளர் திருதிரு என விழித்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பலத்த சிரிப்பலையை ஏற்படுத்தி இருக்கிறது.