அது எப்படி..! சங்கோஜமா இருக்காது… திராவிட மாடல் கக்கூஸ்!

அது எப்படி..! சங்கோஜமா இருக்காது… திராவிட மாடல் கக்கூஸ்!

Share it if you like it

ஓரே நேரத்தில் இருவர் பயன்படுத்தும் வகையில் கழிவறை வடிவமைக்கப்பட்டு இருப்பது போன்ற புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழகத்தை நம்பர் 1 மாநிலமாக, மாற்றுவதே எனது லட்சியம் என தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசி வருகிறார். ஆனால், மாநிலத்தில் நடக்கும் சம்பவங்களை எல்லாம் வைத்து பார்க்கும் போது அது சுத்த பொய் என்பது தொடர்ந்து அம்பலமாகி வருகிறது. இதனிடையே, வேலூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டியாக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது. அந்த வகையில், பல்வேறு சீரமைப்பு பணிகள் அங்கு வேகமாக நடைபெற்று வருகின்றன.

இதையடுத்து, வேலூர் மெயின் பஜார் காளிகாம்பாள் கோவில் தெருவில் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றன. அப்போது, சாலையின் ஓரமாக நின்று கொண்டு இருந்த இருசக்கர வாகனத்தின் மீதும் சிமெண்ட் கொட்டி சாலையை அமைத்து இருந்தனர். இதுகுறித்தான, காணொளி மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி தமிழக மக்களிடையே பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தி இருந்தது.

இப்படிப்பட்ட சூழலில், கோவை மாவட்டம் அம்மன்குளம் பகுதியில் மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் சமுதாயக் கழிப்பறை கட்டப்பட்டு இருக்கிறது. ஆண்கள் மற்றும் பெண்களுக்கென தனித்தனியே கழிவறைகள் கட்டப்பட்டு இருக்கின்றன. இதில், வேடிக்கை என்னவென்றால், ஓரே கழிவறையை இருவர் பயன்படுத்துவது போன்று அது வடிமைக்கப்பட்டுள்ளது. அதுகுறித்தான, புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த, கழிவறைக்கு கதவுகளும் தண்ணீரும் இல்லை என்பது தான் ஹைலைட்.

மத்திய அரசு, பா.ஜ.க., மோடி என்றால் உடனே குரல் கொடுப்பவர் உதயநிதி ஸ்டாலின். ஆனால், கோவை மாநகராட்சியில் நிகழ்ந்து இருக்கும் அட்டூழியம், குறித்து எப்போது? பேசுவார் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

கழிவறை
Image

Share it if you like it