மதுக்கடைகளை திறக்க கோரி குடிமகன்கள் செய்யாற்றில் போராட்டம் நடத்தி இருக்கும் சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பலத்த சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது. இதுதான், திராவிட மாடல் ஆட்சியின் சாதனையா? என்ற கேள்வியையும் எழுப்பி இருக்கின்றனர்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கை கொண்டு வருவோம் என கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் கூறியிருந்தார். அதே கருத்தினை, தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி மற்றும் தூத்துக்குடி எம்.பி. கனிமொழி உள்ளிட்ட தலைவர்கள் கூறியிருந்தனர்.
இதையடுத்து, தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பு ஏற்றுக் கொண்டார். இந்த அரசு அமைந்து 16 மாதங்களை கடந்து விட்டது. எனினும், பூரண மதுவிலக்கு சட்டம் நடைமுறைக்கு வரவில்லை. இதன்காரணமாக, இளம்பெண்கள், இளைஞர்கள், பள்ளி மற்றும் கல்லூரியை சேர்ந்த மாணவ, மாணவிகள் தற்போது குடிக்க ஆரம்பித்து உள்ளனர். மதுவால், தமிழகம் கற்காலத்தை நோக்கி நகர்ந்துக கொண்டு இருக்கிறது. எங்கள், ஆட்சியில் மதுக்கடைகளை மூடுவோம் என கூறிய தி.மு.க. தலைவர்கள் இன்று வரை ஏன்? வாய் திறக்கவில்லை என்பதே பலரின் கேள்வியாக இருந்து வருகிறது.
மாநிலத்தின் நலனை கருத்தில் கொண்டு மதுக்கடைகளை மூட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலர் தமிழக அரசிற்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். இப்படிப்பட்ட சூழலில், வேலூர் மாவட்டம் செய்யாற்றில், மதுக்கடையை உடனே திறக்க வேண்டி, டாஸ்மாக் குழந்தைகள் ஆர்ப்பாட்டம் நடத்திய காணொளி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.