பொய் செய்தி: தி.மு.க ஐடி விங் முடக்கம்!

பொய் செய்தி: தி.மு.க ஐடி விங் முடக்கம்!

Share it if you like it

தி.மு.க.வின் ஐ.டி விங் முடக்கப்பட்டு இருக்கும் சம்பவம் அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தி.மு.க மூத்த தலைவரும், நாடாளுமன்ற குழு தலைவருமாக இருப்பவர் டி. ஆர். பாலு. இவரது, மகன் டி.ஆர்.பி. ராஜா தி.மு.க ஐ.டி.விங் மாநிலச் செயலாளராகவும் மன்னார்குடி எம்.எல்.ஏ-வுமாக இருந்து வருகிறார். இவர், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மற்றும் மத்திய அரசுக்கு எதிராக தொடர்ந்து அவதூறு செய்திகளை பரப்புவது, உண்மைக்கு மாறான கருத்துக்களை தொடர்ந்து ட்விட்டரில் பதிவு செய்வது என்று தனது பொன்னான நேரத்தை இன்று வரை பா.ஜ.க.விற்கு எதிராகவே செலவிட்டு வருகிறார்.

இரவோடு இரவாக பதிவை டெலிட் செய்த டி.ஆர்.பி.ராஜா: கலாய்க்கும் நெட்டிசன்கள்!

அந்த வகையில், கடந்த 2013 – ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொண்ட ஊர்தியை, பா.ஜ.க ஆட்சியில் நடைபெற்ற அணிவகுப்போடு ஒப்பிட்டு தனது ட்விட்டரில் ஒரு பதிவு ஒன்றினை வெளியிட்டு இருந்தார். இது பொய் செய்தி என டி.ஆர்.பி ராஜா-விற்கு பா.ஜ.க ஐ.டி விங் பதிலடியை கொடுத்த பின்பு கமுக்கமாக அதனை நீக்கி இருந்தார்.

அதேபோல, கடந்த நகர்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளி வரும் முன்பே, 134 – வது வார்டு பா.ஜ.க வேட்பாளர் உமா ஆனந்தன் வெறும் 8 ஓட்டுகள் வாங்கி தோல்வி அடைந்தார் என தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டு இருந்தார். ஆனால், பா.ஜ.க வேட்பாளர் அபார வெற்றி பெற்றதை தொடர்ந்து தனது ட்விட்டர் பதிவை உடனே நீக்கி இருந்தார்.

Image

இதனை தொடர்ந்து, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் குறித்து உண்மைக்கு புறம்பான பதிவு ஒன்றினை அண்மையில் வெளியிட்டு இருந்தார். இப்படியாக, பொய் செய்தி வெளியிடுவது, அவதூறு பரப்புவது என டி.ஆர்.பி ராஜா தொடர்ந்து செயல்பட்டு கொண்டு இருக்கிறார் என்ற குற்றச்சாட்டு இவர் மீது குவிந்து வருகிறது. இப்படிப்பட்ட சூழலில் தான், தி.மு.க.வின் ஐ.டி விங் முடக்கப்பட்டு இருக்கும் சம்பவம் தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்து இருக்கிறது. இது, அக்கட்சி தொண்டர்கள் மற்றும் மூத்த தலைவர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது

பொய்ச் செய்தி பரப்பி அசிங்கப்பட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.!

மிக நீண்ட போராட்டத்திற்கு பிறகு தி.மு.க தனது பழைய ஐ.டி.யை மீட்டுள்ளதாக தற்பொழுது செய்தி வெளியாகி இருக்கிறது.


Share it if you like it