ஹிந்துக்களை மட்டும் வெறுப்பது ஏன் முதல்வரே?

ஹிந்துக்களை மட்டும் வெறுப்பது ஏன் முதல்வரே?

Share it if you like it

சிறுபான்மையினர் பண்டிகைகளுக்கு ஆவின் நிர்வாகம் வாழ்த்து தெரிவித்து இருக்கும் நிலையில், விநயாகர் சதுர்த்திக்கு ஏன்? வாழ்த்து தெரிவிக்கவில்லை என்ற கேள்வியை சமூக ஆர்வலர்கள் எழுப்பி இருக்கின்றனர்.

ஹிந்துக்களின் கலாச்சாரம், பண்பாடு மற்றும் வழிபாட்டு முறைகள் தி.மு.க. ஆட்சியில் தொடர்ந்து அவமதிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, ஸ்டாலினில் தொடங்கி அக்கட்சியை சேர்ந்த இரண்டாம் கட்ட தலைவர்கள் வரை ஹிந்துக்களை இழித்தும், பழித்தும் பேசி வருகின்றனர். இதுதவிர, 100-க்கும் மேற்பட்ட ஹிந்து ஆலயங்கள் விடியல் ஆட்சியில் இடிக்கப்பட்டு இருக்கும் காணொளிகளை இன்றும் சமூக வலைத்தளங்களில் காண முடியும்.

இந்த நிலையில், ரம்ஜான், கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகைகளுக்கு ஆவின் நிர்வாகம் தனது வாழ்த்து செய்தியை பால் பாக்கெட்டில் பதிவு செய்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறது. ஆனால், கோடிக்கணக்கான ஹிந்துக்களின் புனித பண்டிகையான விநாயகர் சதுர்த்தியை மட்டும் தி.மு.க. அரசு முற்றிலும் புறக்கணித்து இருக்கிறது. இந்த சம்பவம் தான், ஹிந்துக்களிடையே கடும் கோவத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இதுதான், அனைத்து மதங்களையும் மதிக்கும் அரசா? எனவும் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்க முதல்வருக்கு மனம் உண்டா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி இருக்கின்றனர்.


Share it if you like it