எக்ஸ்ட்ரா 200 ரூபாய்: தி.மு.க.வை பங்கமாக கலாய்த்த திருச்சி சூர்யா!

எக்ஸ்ட்ரா 200 ரூபாய்: தி.மு.க.வை பங்கமாக கலாய்த்த திருச்சி சூர்யா!

Share it if you like it

தி.மு.க தனது கட்சி கூட்டத்திற்கு எப்படி ஆட்களை சேர்க்கும் என திருச்சி சிவாவின் மகனும் பா.ஜ.க உறுப்பினருமான சூர்யா சுவைப்பட பேசிய காணொளி ஒன்று தற்பொழுது சமூகவலைத்தளங்களில் வைரலாக துவங்கியுள்ளது.

தி.மு.க.வின் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமாக இருந்தவர் திருச்சி சிவா. இவரது, மகன் சூர்யா. தி.மு.க.வில் உள்ள குடும்ப ஆதிக்கம் காரணமாக அக்கட்சியில் இருந்து வெளியேறினார். இதையடுத்து, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் முன்னிலையில் தம்மை பா.ஜ.க.வில் இணைத்து கொண்டார். இதையடுத்து, பல்வேறு இணையதள ஊடகங்களில் தொடர்ந்து அவர் பேட்டி அளித்து வருகிறார். அந்தவகையில், சூர்யா ரெட் பிக்ஸ் யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில்,

சத்தியமாக சொல்கிறேன் நான் தி.மு.க.வில் இருந்து வந்தவன். தி.மு.க.வில் காசு கொடுக்காமல் ஒரு கூட்டமும் நடத்த முடியாது. 300 ரூபாய் பணம் கொடுக்கணும், சாப்பாடு போடணும், வேன் ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும். இது எல்லாம், சாதாரண பொதுக் கூட்டத்திற்கு, இதைவிட ஸ்பெஷல் ஐட்டம் இருக்கு. இதுவே, ஸ்டாலின் பொதுக்கூட்டம் என்றால் 500 ரூபாய் கொடுக்க வேண்டும். ஏன் என்றால் இரண்டு மணி நேரத்திற்கு முன்பே வெயிலில் போய் நிற்க வேண்டும். அவர், பேசுவதை எல்லாம் மனுஷன் கேட்க முடியாது.

அதற்காகவே, எக்ஸ்ட்ரா 200 ரூபாய் கொடுத்தால் தான் வருவான். பா.ஜ.க.வில் அப்படி எல்லாம் கிடையாது. பா.ஜ.க நிர்வாகிகள் தனது சொந்த கை காசுகளை செலவு செய்து டீ தான் குடிக்கிறார்கள். மற்ற கட்சிகள் காசு கொடுத்த கூட்டம் கூட்டினால் அதை கூட்டம் என்கிறார்கள், காசு கொடுக்காமல் உணர்வால் கூடினால் இது எல்லாம் ஒரு கூட்டமா என பா.ஜ.க.வை பார்த்து கேட்கிறார்கள். பா.ஜ.க தமிழகத்தில் வேகமாக வளர்ந்து கொண்டு இருக்கிறது. தி.மு.க.வில் இவ்வளவு ஆண்டு காலம் பயணித்தவன் என்ற முறையில் சொல்கிறேன். பா.ஜ.க.வில் பணம் கொடுத்து கூட்டம் சேர்க்கவில்லை. உணர்வால் தான் மக்கள் கூடுகிறார்கள் என திருச்சி சூர்யா பேசியுள்ளார். மேலும் விவரங்களுக்கு இக்காணொளியின் வீடியோ லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


Share it if you like it