சீட்டில் உட்கார கூடாது: மாணவிகளிடம் கண்டக்டர் வாக்குவாதம்!

சீட்டில் உட்கார கூடாது: மாணவிகளிடம் கண்டக்டர் வாக்குவாதம்!

Share it if you like it

சீட்டில் உட்கார கூடாது என மாணவிகளிடம் கண்டக்டர் வாக்குவாதம் செய்த காணொளி ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாக துவங்கியுள்ளது.

அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த திருமானூர், சாத்தமங்கலம், கல்லூர், விரகாலூர் மற்றும் வெற்றியூர் பகுதியை சேர்ந்த கிராமத்து மாணவிகள் தஞ்சாவூரில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருகின்றனர். இந்த மாணவிகளுக்கு இலவச பஸ் பாஸ் உள்ளது. தஞ்சையில் இருந்து அரியலூர் வருவதற்கு அரசு பஸ்ஸில் ஏறி மாணவிகள் சீட்டில் அமர்ந்து உள்ளனர். இதையடுத்து, அங்கு பணியில் இருந்த நடத்துனர் மாணவிகள் சீட்டில் அமர கூடாது என்று வாக்குவாதம் செய்துள்ளார். இதுதவிர, பஸ் புறப்படுவதற்கு 5 நிமிடத்திற்கு முன்பு தான் பஸ்ஸில் ஏற வேண்டும் என கூறியுள்ளார். இதன்காரணமாக, மாணவிகளுக்கும் கண்டக்டருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இக்காணொளி தற்பொழுது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

காசு கொடுத்து பயணம் செய்பவர்கள் அமர்ந்து கொண்டு வர வேண்டும். இலவச பஸ் பாஸ் வைத்து இருக்கும் மாணவ, மாணவிகள் நின்று கொண்டு வரவேண்டும் என நடத்துனர்கள் நினைப்பதாக குற்றச்சாட்டு உள்ளது. அதனை மெய்ப்பிக்கும் வகையில், இச்சம்பவம் நடந்துள்ளது. பள்ளி மாணவிகளிடம் இதுபோன்று கண்டிஷன் போடும் நிகழ்வுகள் தொடர்கதையாக இருந்து வருகிறது. இதன்காரணமாக, மாணவர்கள் பஸ்ஸில் புட் போர்டு அடிக்கும் சூழல் ஏற்படுவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர். எனவே, மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தமிழக முதல்வர் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தமிழக அரசிற்கு கோரிக்கை வைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it