நெல்லை கல்குவாரி விபத்தில் 3 பேர் பலி: கண்டும்காணாமல் இருக்கும் தி.மு.க. அரசு!

நெல்லை கல்குவாரி விபத்தில் 3 பேர் பலி: கண்டும்காணாமல் இருக்கும் தி.மு.க. அரசு!

Share it if you like it

நெல்லையில் கல்குவாரி விபத்தில் 3 பேர் பலியாகி இருக்கும் நிலையில், தி.மு.க. அரசோ கண்டும் காணாமல் இருப்பது மிகப்பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

திருநெல்வேலி மாவட்டம் அடைமிதிப்பான்குளம் பகுதியில் தனியார் கல்குவாரி ஒன்று இயங்கி வருகிறது. அ.தி.மு.க. ஆட்சியில் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் மீண்டும் கல்குவாரிக்கு அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது. இதன் பிறகு இந்த கல்குவாரியில் தினமும் வெடிவைத்து பாறைகள் தகர்க்கப்பட்டு கற்கள் உடைக்கப்பட்டு தமிழகம் மட்டுமல்லாது கேரளாவுக்கும் அனுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில், கடந்த 14-ம் தேதி இரவு வெடி வைத்து பாறைகள் தகர்க்கப்பட்டு, சுமார் 400 அடி ஆழத்தில் கற்களை அள்ளும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது, திடீரென பலத்த சத்தத்துடன் பாறைகள் சரிந்து விழுந்தன. இதில், கற்களை அள்ளும் பணியில் ஈடுபட்டிருந்த காக்கைகுளம் பகுதியை சேர்ந்த செல்வகுமார் (30), தச்சநல்லூர் ஊருடையான்குடியிருப்பை சேர்ந்த ராஜேந்திரன் (35), இளைய நயினார்குளத்தை சேர்ந்த செல்வம் (27), விட்டிலாபுரத்தை சேர்ந்த முருகன் (40), நாட்டார்குளம் பகுதியை சேர்ந்த விஜய் (27), ஆயன்குளத்தை சேர்ந்த மற்றொரு முருகன் (23) ஆகிய 6 பேர் பாறைகளின் இடிபாடுகளில் சிக்கி கொண்டனர். மேலும், கற்களை ஏற்றுவதற்காக வந்த 3 லாரிகள், கற்களை லாரியில் ஏற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த 2 பொக்லைன் இயந்திரங்களும் இடிபாடுகளில் சிக்கி நொறுங்கின.

தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர், கயிறு மூலம் குவாரிக்குள் இறங்கி 6 பேரையும் மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் ராமேஸ்வரத்தில் இருந்து இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்றும் மீட்புப் பணிக்கு வந்தது. ஆனால், மீட்புப் பணியில் ஈடுபடுத்த முடியாத சூழல் நிலவியதால் ஹெலிகாப்டர் திரும்பிச் சென்றது.

இதைத் தொடர்ந்து, நாங்குநேரி, பேட்டை, நாகர்கோவில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது இடிபாடுகளில் சிக்கி லேசான காயமடைந்த விட்டிலாபுரத்தை சேர்ந்த முருகன், விஜய் ஆகிய 2 பேரையும் மீட்டு, அங்கு தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மற்றவர்கள் இடிபாடுகளின் அடியில் சிக்கி இருந்ததால், அந்த 4 பேரையும் மீட்பது பெரும் சவாலாக இருந்தது. சுமார் 18 மணி நேர போராட்டத்திற்கு பிறகு செல்வம் என்பவர் பத்திரமாக மீட்கப்பட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும், சிகிச்சை பலனின்றி செல்வம் உயிரிழந்து விட்டார்.

இதன் பிறகு கல்குவாரியில் இருந்து மீட்கப்பட்ட மற்றொரு தொழிலாளியான முருகன் என்பவரும் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.

நாங்குநேரி அருகே உள்ள ஆயன்குளம் பகுதியை சேர்ந்தவரான முருகன் லாரி கிளீனர். மீட்புப் பணிகள் நடக்கும்போதே தொடர்ந்து பாறைகள் சரிந்ததால் பணிகளில் தொய்வு ஏற்பட்டது. இதனிடையே, தேசிய பேரிடர் மீட்புக்குழுவைச் சேர்ந்த 30 பேர்கொண்ட குழுவினர் நெல்லை வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

இந்த சூழலில், கல்குவாரியில் இருந்து மற்றொரு நபர் மீட்கப்பட்டதாகவும், அவரும் உயிரிழந்து விட்டதாகவும் தகவல் கிடைத்திருக்கிறது. இந்த கல்குவாரியின் உரிமையாளரான சங்கரநாராயணன் என்பவரை போலீஸார் கைது செய்தனர். மேலும், ஒப்பந்ததாரரும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும், திசையன்விளை யூனியன் முன்னாள் சேர்மனுமான சேம்பர் செல்வராஜ், அவரது மகன் குமார், குவாரி மேலாளர் செபாஸ்டின் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள்.

எனினும், இந்த கல்குவாரியை, தி.மு.க.வைச் சேர்ந்த முக்கியப் புள்ளிகள் பினாமி பெயரில் நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இதனால்தான் மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் சிறுவன் சுஜித் விழுந்தபோது குதித்து ஆர்ப்பாட்டம் செய்த தி.மு.க., இவ்வளவு பெரிய கல்குவாரி விபத்து நிகழ்ந்தும் கப்சிப்பென இருக்கிறது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.


Share it if you like it