கேட்ட பொருட்களை கொடுக்க வேண்டும் என கடைக்காரரை மிரட்டிய கஞ்சா ஆசாமிகள்.
சென்னை பாரிமுனை கொத்தவால்சாவடியில் பெட்டி கடை நடத்தி வருபவர் பைசல் ரஹ்மான். இவரது, கடைக்கு வந்த கஞ்சா ஆசாமிகள் இருவர் இலவசமாக பொருட்களை கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு, கடையின் உரிமையாளர் பொருட்களை தரமறுத்துள்ளார். இதையடுத்து, ஆத்திரமடைந்த அந்த இளைஞர்கள் அங்கிருந்த பொருட்களை கீழே தள்ளி ரகளையில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த செய்தியினை பிரபல ஊடகமான பாலிமர் செய்தியாக வெளியிட்டுள்ளது
அதன் லிங்க் இதோ.
தி.மு.க ஆட்சிக்கு வந்தால் சட்டம் ஒழுங்கிற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்போம். சிறப்பான ஆட்சியை தமிழக மக்களுக்கு வழங்குவோம் என ஸ்டாலின், உதயநிதி மற்றும் தூத்துக்குடி எம்பி கனிமொழி கடந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது வாக்குறுதி கொடுத்து இருந்தனர். இவர்களின், பேச்சை நம்பிய பொதுமக்கள் விடியல் கிடைக்கும் என்று தமிழக முதல்வராக ஸ்டாலினை தேர்ந்தெடுத்தனர். இதையடுத்து, தற்பொழுது தமிழகத்தில் நடப்பது என்ன? திருட்டு, இருட்டு, உருட்டு, மிரட்டு என்பதை தவிர வேறு ஒன்றையும் தமிழக மக்கள் அனுபவிக்கவில்லை என்பதே நிதர்சனம்.
நாளுக்கு நாள் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமடைந்து வரும் சூழலில், சென்னையில் கஞ்சா ஆசாமிகள் நிகழ்த்தி இருக்கும் இச்சம்பவம் தமிழக மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈ.சி.ஆரில் சைக்கிள் ஓட்டி பொழுதை போக்கும் முதல்வர் சட்டம் ஒழுங்கு அவரது கட்டுப்பாட்டில் உள்ளது என்பதை யாராவது அவருக்கு நினைவுப்படுத்துங்கள் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.