இதோ ஆரம்பிச்சிட்டாங்க இல்ல… விநாயகர் சிலையை உடைத்த தி.க. குரூப்!

இதோ ஆரம்பிச்சிட்டாங்க இல்ல… விநாயகர் சிலையை உடைத்த தி.க. குரூப்!

Share it if you like it

விநாயகர் சிலையை இளைஞர் ஒருவர் உடைப்பது போன்ற காணொளி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இச்சம்பவம், ஹிந்துக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளையும், கோவத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

தி.மு.க. ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், ஹிந்துக்களின் பண்டிகைகளுக்கு தனது வாழ்த்து செய்திகளை தெரிவிப்பது இல்லை. அதேசமயத்தில், அவர்களின் வழிபாட்டு முறைகள் தொடர்ந்து இழிவுப்படுத்தப்பட்டு வருகின்றன. கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமியர்களின் ஓட்டு கிடைக்க வேண்டும் என்பதற்காக குறிப்பிட்ட ஒரு மதத்தை இன்று வரை தி.மு.க. தலைவர்கள் தாக்கி வருகின்றறனர். ஆம், அது உண்மையும் கூட என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.

கலைஞர், ஸ்டாலின், உதயநிதி அடுத்து இன்பநிதி இவர்கள் குடும்பத்தை தவிர எந்த ஒரு குடும்பமும் ஆட்சிக்கு வந்து விடக் கூடாது. ஆகவே, தி.மு.க. ஹிந்து விரோத போக்கை தீவிரமாக கடைப்பிடித்து வருகிறது என்ற குற்றச்சாட்டும் உண்டு. எனவே, ஹிந்துக்களின் உணர்வுகளை இஸ்லாமிய அடிப்படைவாதிகள், கிறிஸ்தவ மிஷநரிகள் மற்றும் தி.க.வினர் காயப்படுத்தினால் அதுகுறித்து கருத்து தெரிவிக்காமல் கள்ள மெளனமாக இருப்பது தி.மு.க.வின் வழக்கம். அதே, சிறுபான்மை சமூகத்தின் உணர்வுகள் காயப்படுத்தப்பட்டால் குரல் கொடுக்கும் முதன்மை கட்சியாக தி.மு.க. இருக்கும் என்பதில் யாருக்கும் மறுகருத்து இருக்க முடியாது.

இதனிடையே, விநாயகர் சதுர்த்தி விழா இந்தியாவை கடந்து உலகம் முழுவதும் இன்று மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், தி.க.வை சேர்ந்த இளைஞர் ஒருவர் விநாயகர் சிலையை உடைப்பது போன்ற காணொளி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்தான காணொளியை நடிகர், தயாரிப்பாளர் என பன்முகதன்மை கொண்ட ஜே.எஸ்.கே. கோபி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் லிங்க் இதோ.


Share it if you like it