தமிழகத்தில் ஆயிரம் பிரச்சனைகள் இருந்து வரும் நிலையில், அது குறித்து எல்லாம் கவலைப்படாமல் வெறும் விளம்பர முதல்வராக ஸ்டாலின் மாறி வருவதற்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விடியல் கிடைக்கும், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம் என தமிழக மக்களுக்கு ஏராளமான வாக்குறுதிகளை அள்ளி தெளித்து ஆட்சிக்கு வந்தது தி.மு.க. ஆனால், இன்று வரை உருப்படியான மக்கள் நலன் சார்ந்த பணிகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டதா என்பது மில்லியன் டாலர் கேள்வி. இந்த நிலையில் தான் அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தினசரி ஆய்வு செய்வது போல் நடித்து விட்டு டீக்கடையில் டீ குடிக்கிறார்; அவர் சைக்கிள் ஓட்டுவதற்கும், ஜிம் செல்வதற்குமா மக்கள் வாக்களித்தார்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார். எடப்பாடி பழனிச்சாமியின் இதே கேள்வியை தான் கடந்த 8 மாதங்களாக விளம்பர முதல்வரிடம் தமிழக மக்கள் எழுப்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.