தொடரும் அவமதிப்பு – முன்களப்பணியாளரை திட்டிய பால்வளத்துறை அமைச்சர்..!

தொடரும் அவமதிப்பு – முன்களப்பணியாளரை திட்டிய பால்வளத்துறை அமைச்சர்..!

Share it if you like it

பத்திரிக்கையாளர்களுக்கு உரிய மரியாதை வழங்காமல் தி.மு.க அமைச்சர்கள், மூத்த தலைவர்கள், தொடர்ந்து அவமரியாதை செய்து வரும் நிலையில் அமைச்சர் நாசர் பத்திரிக்கையாளரை திட்டிய காணொளி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

  • தி.மு.க-வின் மூத்த ஆபாச பேச்சாளர்களில் ஒருவரும் தி.மு.க அமைப்பு செயலாளருமான ஆர்.எஸ். பாரதி சில ஆண்டுகளுக்கு முன்பு ரெட் லைட் மீடியா என்று தமிழக ஊடகத்தை மிக கடுமையாக விமர்சனம் செய்தது. .
  • தமிழக வேளாண்துறை அமைச்சர் பத்தரிக்கையாளர் ஒருவரை கிறுக்கு தனமான கேள்வி கேக்காத என்று விமர்சனம் செய்தது.
  • நிதியமைச்சர் பி.டி.ஆர் பத்திரிக்கையாளரை கோவமாக திட்டியது.
  • தி.மு.க MP தயாநிதி மாறன் பத்திரிக்கையாளரை ஒருமையில் விமர்சனம் செய்தது.

என பத்திரிக்கையாளர்களுக்கு உரிமரியாதை வழங்காமல், தொடர்ந்து தி.மு.க எம்.பி, அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், மிக கடுமையாக விமர்சனம் செய்து வரும் நிலையில். தன்னிடம் கேள்வி எழுப்பிய பத்திரிக்கையாளரிடம் தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் மிக கடுமையாக நடந்து கொண்ட காணொளி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Share it if you like it