தி.மு.க. ஆட்சியில் நீதிபதிகளுக்கே பாதுகாப்பில்லாத நிலை ஏற்பட்டிருக்கிறது என்று வேதனை தெரிவிக்கிறார்கள் சமூக ஆர்வலர்களும், எதிர்க்க்சியினரும்.
தி.மு.க. ஆட்சி என்றாலே, வன்முறை வெறியாட்டங்கள் தாண்டவமாடும். ரவுடிகளின் அராஜகங்கள் அதிகரிக்கும். தி.மு.க. குண்டர்களின் அட்டகாசம் எல்லை மீறும். பிரியாணிக் கடையில் குஸ்தி, பஜ்ஜி கடையில் கராத்தே, பியூட்டி பார்லரில் அடி உதை என கணக்கிலடங்கா சம்பவங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். அவ்வளவு ஏன், போலீஸாரை தாக்குவது, தரக்குறைவாக பேசுவது என்பன போன்ற சம்பவங்களும் அரங்கேயது. இதனால், போலீஸாரே பாதுகாப்பில்லாத நிலையில் இருந்து வருகின்றனர்.
இந்தி நிலையில்தான், நீதிபதிகளுக்கும் பாதுகாப்பில்லாத நிலை ஏற்பட்டிருக்கிறது. சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் 4-வது நீதிமன்ற நீதியாக பணிபுரிந்து வருபவர் பொன்.பாண்டியன். அதேபோல, ஓமலூர் நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வந்தவர் பிரகாஷ். இவரை, நீதிபதி பொன்.பாண்டியன், சேலம் நீதிமன்றத்துக்கு பணியிட மாறுதல் செய்ததாகக் கூறப்படுகிறது. இந்த சூழலில், வழக்கம்போல இன்று காலை பணிக்கு வந்திருக்கிறார் நீதிபதி பொன்.பாண்டியன். அப்போது, அங்கு வந்த பிரகாஷ், தன்னை பணி மாறுதல் செய்தது தொடர்பாக, நீதிபதி பொன்.பாண்டியனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்.
வாக்குவாதம் முற்றிய நிலையில், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து நீதிபதி பொன்.பாண்டியனை குத்தி இருக்கிறார் பிரகாஷ். இதில், நீதிபதியின் மார்பில் குத்து விழுந்தது. இதனால், நீதிபதி பொன்.பாண்டியன் கூச்சலிடவே, அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து, பிரகாஷை பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். பிரகாஷை கைது செய்த போலீஸார், நீதிபதி பொன்.பாண்டியன் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்கள். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவத்தை மையப்படுத்தித்தான், தி.மு.க. ஆட்சியில் போலீஸாருக்குத்தான் பாதுகாப்பில்லை என்று பார்த்தால், நீதிபதிகளுக்கும் பாதுகாப்பில்லாத நிலையாக மாறிவிட்டதே என்று சமூக ஆர்வலர்களும், எதிர்க்கட்சியினரும் வேதனை தெரிவித்து வருகின்றனர். நெட்டிசன்களும் தி.மு.க. ஆட்சி பற்றி, வறுத்தெடுத்து வருகின்றனர்.