சமீபத்தில் உதகையில் நகராட்சி கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய திமுக கவுன்சிலர் முஸ்தபா மார்க்கெட்டில் கடைகளை அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்டுவதில் முறைகேடு நடந்துள்ளதாக கூறினார் இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்து எழுந்து பேசிய துணை தலைவர் ரவிக்குமார் திமுக அரசு கொண்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளுக்கு சொந்த கட்சிக்காரரே தடையாக இருந்து அசிங்கப்படுத்தப்படுவதாக கூறினார். இதற்கு பதிலளித்த முஸ்தபா என்ன வளர்ச்சி திட்டம் லஞ்சம் வாங்கிக்கொண்டுதானே எல்லாம் செய்கிறீர்கள் 36 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கிக்கொண்டுதானே எல்லாம் செய்கிறீர்கள் என்று பகிரங்கமாக உண்மையை அனைவரின் முன்னிலையிலும் போட்டு உடைத்தார். இதுதொடர்பாக பாஜக மத்திய அமைச்சர் எல்.முருகன் அவரது சமூக வலைதள பக்கத்தில்,
எங்கும் எதிலும் ஊழல் ஊழல் ஊழல் …! திமுகவிடம் மக்கள் வேறு எதை எதிர்பார்க்க முடியும்!?
சொந்தக் கட்சிக்காரரே குறை கூறும் ஒரு அவல நிலை திமுகவில் மட்டும் தான் நடக்க முடியும்.
உதகையில் புதிய கடைகளை கட்டுவதற்கு, 36 கோடி ரூபாய்க்கு வசூலிக்கப்பட்டதில் முறைகேடு, இதை நான் சொல்லவில்லை திமுகவின் நகராட்சி கவுன்சிலரே சொல்கிறார், அதுவும் நகராட்சி கூட்டத்தில் பேசுகிறார்.
நகராட்சி தலைவர் நகராட்சி துணைத் தலைவர் ஆகியோர் குற்றச்சாட்டுக்கு சப்பை கட்டு கட்டுகிறார்கள்..!
திமுக என்றால் முறைகேடு..! முறைகேடு என்றால் திமுக..! என்பதற்கு இதுவே ஒரு பிரதான உதாரணம்.
வழக்கம் போல போலி திராவிட மாடலின் சாயம் கோட்டை முதல் – நகராட்சி வரை வெளுத்து போய் இருக்கிறது.
இது தான் உங்கள் திராவிட மாடலா ? இவ்வாறு பதிவிட்டு அதனோடு நகராட்சி கூட்டத்தின் காணொளியையும் பதிவிட்டுள்ளார். பலரும் அந்த பதிவினை பகிர்ந்து வருகின்றனர்